உள்ளடக்கத்துக்குச் செல்

லாசா ஆறு

ஆள்கூறுகள்: 29°20′27″N 90°45′38″E / 29.34083°N 90.76056°E / 29.34083; 90.76056
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லாசா ஆறு
லாசா மாவட்டத்தின் தோட்ட விகாரை அருகே பாயும் லாசா ஆறு (நாள்:1 டிசம்பர் 2006)
லாசா நகரம்
அமைவு
நாடுதிபெத்து
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ அமைவுநயென்சென் தாங்லா மலைகள
 ⁃ ஆள்கூறுகள்30°11′12″N 91°20′41″E / 30.1868°N 91.3448°E / 30.1868; 91.3448
 ⁃ ஏற்றம்5,290 m (17,360 அடி)
முகத்துவாரம் 
 ⁃ ஆள்கூறுகள்
29°20′27″N 90°45′38″E / 29.34083°N 90.76056°E / 29.34083; 90.76056
 ⁃ உயர ஏற்றம்
3,590 m (11,780 அடி)
நீளம்450 km (280 mi)
வடிநில அளவு26,000 km2 (10,000 sq mi)
வெளியேற்றம் 
 ⁃ சராசரி335 m3/s (11,800 cu ft/s)[1]
வடிநில சிறப்புக்கூறுகள்
வடிநிலம்பிரம்மபுத்திரா ஆறு
துணை ஆறுகள் 
 ⁃ இடதுரெட்டிங் தாங்போ ஆறு
 ⁃ வலதுபெங்க்போ ஆறு, துய்லோங் ஆறு

லாசா ஆறு (Lhasa River, also called Kyi Chu (Tibetan: སྐྱིད་ཆུ་Wylie: sKyid chu, மரபுவழிச் சீனம்: 拉薩河பின்யின்: Lāsà hé), சீனாவின் மேற்கே உள்ள திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் தெற்கில் அமைந்த லாசா மாவட்டத்தில் பாயும் ஆறு ஆகும்.[2] இது யார்லங் சாங்போ ஆற்றின் துணை ஆறு ஆகும். கோடைக் காலத்தில் லாசா ஆற்று நீர் வெள்ளத்துடன் பாய்ம். லாசா ஆற்றின் குறுக்கே இரண்டு புனல் மின் நிலையங்கள் கட்டப்பட்ட்டுள்ளது. லாசா ஆற்றின் வடிநிலப் பகுதி 32,471 சதுர கிலோமீட்டர்கள் (12,537 sq mi) பரப்பளவு கொண்டது.

லாசா ஆற்றின் வடிநிலப்பகுதி இமயமலையில் 4,500 மீட்டர்கள் (14,800 அடி) உயரத்தில் உள்ளது. இந்த ஆறு லாசா மாவட்டதின் பொருளாதாரம், பண்பாடு மற்றும் அரசியலுக்கு ஆதாரமாக உள்ளது. 1990-ஆம் ஆண்டின் கணக்குப் படி, லாசா ஆற்றின் வடிநிலப் பகுதியில் 3,29,700 மக்கள் தொகை கொண்டது. அதில் 88% வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். லாசா ஆற்றின் வடிநிலப் பகுதியின் தட்பவெப்பம் 1.2 முதல் 7.5 °C (34.2 முதல் 45.5 °F) ஆகவுள்ளது. ஆண்டு சராசரி மழைப்பொழிவு 466.3 மில்லிமீட்டர்கள் (18.36 அங்) உள்ளது. பருவ மழைக்காலமான சூன் முதல் செப்டம்பர் வரையில் 85% மழைப்பொழிவு உள்ளது. லாசா ஆறு 35,258 எக்டேர்கள் (87,120 ஏக்கர்கள்) பரப்பளவு விளைநிலத்திற்கு நீர் ஆதாரமாக உள்ளது.

படக்காட்சியகம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

ஆதாரம்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=லாசா_ஆறு&oldid=3227368" இலிருந்து மீள்விக்கப்பட்டது