உள்ளடக்கத்துக்குச் செல்

ரோமனெசுக் மறுமலர்ச்சிக் கட்டிடக்கலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமெரிக்க ரோமனெசுக் மறுமலர்ச்சிப் பாணியின் தொடக்ககால எடுத்துக்காட்டுகளில் ஒன்றான சிமித்சோனிய நிறுவனக் கட்டிடம். வடிவமைப்பு இளைய சேம்சு ரென்விக் in 1855.

ரோமனெசுக் மறுமலர்ச்சிக் கட்டிடக்கலை என்பது, 11 ஆம் 12 ஆம் நூற்றாண்டுகளில் நடைமுறையில் இருந்த ரோமனெசுக் கட்டிடக்கலைப் பாணியை அடிப்படையாகக் கொண்டு, 19 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் கட்டிட வடிவமைப்பில் பயன்படுத்தப்பட்ட ஒரு பாணி ஆகும்.[1] வரலாற்றில் முந்திய ரோமனெசுக் பாணியைப் போலன்றி, ரோமனெசுக் மறுமலர்ச்சிப் பாணியின் வளைவுகளும் சாளரங்களும் எளிமையானவை.

ரோமானெசுக் மறுமலர்ச்சிப் பாணியின் தொடக்ககால வகைகளுள் ஒன்றான "வட்ட-வளைவுப் பாணி" என அழைக்கப்பட்ட வகை செருமனியிலும்[2] 1830க்குப் பின்னர் பிற நாடுகளில் வாழும் செருமன் மக்கள் மத்தியிலும் புகழ் பெற்றிருந்தது. சுதந்திரமான முறையில் ரோமனெசுக் பாணியைப் பயன்படுத்திய முக்கியமானவரும், செல்வாக்கு உள்ளவருமான அமெரிக்கக் கட்டிடக்கலைஞர், என்றி ஆப்சன் ரிச்சர்ட்சன் என்பவர். அமெரிக்காவில் மேற்படி கட்டிடக்கலைஞரால் வடிவமைக்கப்பட்ட கட்டிடங்கைளை எடுத்துக்காட்டாகக் கொண்டு உருவான பாணி ரிச்சார்ட்சோனிய ரோமனெசுக் என அழைக்கப்பட்டது.[3]

குறிப்புக்கள்

[தொகு]
  1. Whiffen, Marcus. American Architecture Since 1780: A guide to the styles. Cambridge, MA: The MIT Press, 1969, 61.
  2. Fleming, John, Hugh Honour and Nikolaus Pevsner. The Penguin Dictionary of Architecture. Middlesex, England: Penguin Books, 1983.
  3. Wilson, Richard Guy. Buildings of Virginia: Tidewater and PiedmontOxford University Press, 2002, 524–5.