ரிச்சர்ட் மாசா
ரிச்சர்டு மாசா Richard Mazza | |
---|---|
வெர்மான்ட் மாநில மேலவை உறுப்பினர் | |
பதவியில் சனவரி 9, 1985 – ஏப்பிரல் 8, 2024 | |
வெர்மான்ட் கீழவை உறுப்பினர் | |
பதவியில் சனவரி 3, 1973 – சனவரி 4, 1977 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ரிச்சார்டு தோமசு மாசா செப்டம்பர் 4, 1939 கொல்சுடர், வெர்மான்ட், ஐக்கிய அமெரிக்கா |
இறப்பு | மே 25, 2024 கொல்சுடர், வெர்மான்ட்[1] | (அகவை 84)
அரசியல் கட்சி | சனநாயகக் கட்சி |
ரிச்சர்டு மாசா (Richard Mazza, 4 செப்டம்பர் 1939 – 25 மே 2024)[2] ஒரு அமெரிக்க வணிகர் மற்றும் வெர்மான்ட் பகுதியைச் சார்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் மக்களாட்சிக் கட்சியைச் சேர்ந்தவர். இவர் வெர்மான்ட் செனட்டினன் உறுப்பினராக 1985 முதல் பணியாற்றி உள்ளார். இவரே இந்த அவையின் மிக நீண்ட கால உறுப்பினர் ஆவார்.[3]
வாழ்க்கை வரலாறு
[தொகு]மாசா 1939 ஆம் ஆண்டு செப்டம்பர் 4 ஆம் நாள் பிறந்தார். இவர் வாழ்நாள் முழுவதும் கோல்செஸ்டரில் வாழ்ந்தவர் ஆவார்.[4] இவர் கோல்செஸ்டரின் பொதுப்பள்ளியில் தனது கல்வியைப் பெற்றார். வினூஸ்கி உயர்நிலைக் கல்விக்கூடத்தில் பட்ம் பெற்றார்.[4]
மாசா கோல்செஸ்டரில் ஒரு அங்காடியின் உரிமையாளராகவும், விற்பனையாளராகவும் இருந்தார்.[4] இவர் சாம்ப்ளெய்ன் பள்ளத்தாக்கின் இயக்குநர்கள் குழுவில் உறுப்பினராகவும் மூத்த குடிமக்களுக்கான வீட்டு வசதித்திட்டத்தின் தலைவராகவும் இருந்தார்.[4] இவர் வெர்மான்ட்டில் பிரதிநிதிகளின் சபையில் 1973 முதல் 1977 முடிய சட்டசபைக் குழுவின் உறுப்பினராகவும், போக்குவரத்துக் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.[4]
1984 ஆம் ஆண்டில், மாசா வெர்மான்ட் செனட்டிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார், மேலும் அவர் 1985 இல் தனது இடத்தைப் பிடித்ததில் இருந்து தொடர்ந்து பணியாற்றினார்.[4] 1991 ஆம் ஆண்டு முதல் இவர் போக்குவரத்துக் குழுவில் தலைவராக பதவி வகித்து வருகிறார்.[4] 1991 ஆம் ஆண்டு முதல் இவர் நிறுவனங்களின் குழுவில் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.[4]
மாசா சட்டமன்றத்தின் கூட்டுப் போக்குவரத்து மேற்பார்வைக் குழுவில் உறுப்பினராக இருந்துள்தோடு, தலைவராகவும் இருந்துள்ளார்.[4] 1997 முதல் இவர் செனட்டின் கமிட்டிகளில் மூன்றாவது உறுப்பினராக இருந்து வருகிறார். குழுக்களுக்கான குழுவானது வெர்மான்ட்டின் லெப்டினன்ட் கவர்னர், வெர்மான்ட் செனட்டின் தலைவர் மற்றும் முழு செனட்டால் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்றாவது உறுப்பினர் ஆகியோரை உள்ளடக்கியது.[4] குழுக்களுக்கான குழுவானது குழுவின் பணிகளைச் செய்வதோடு தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் குழுவின் எழுத்தர்களை நியமிக்கிறது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ruehsen, Ella (2024-05-29). "Former Sen. Dick Mazza dies at 84 after dedicating decades of service to Vermonters". Milton Independent (in ஆங்கிலம்). Archived from the original on 2024-05-29. பார்க்கப்பட்ட நாள் 2024-05-30.
- ↑ Team, WCAX News (2024-05-26). "Longtime Vermont Senator Richard Mazza of Colchester passed away Saturday". WCAX (in ஆங்கிலம்). Archived from the original on 2024-05-26. பார்க்கப்பட்ட நாள் 2024-05-26.
- ↑ "Bove's Build Milton Sauce Plant". burlingtonfreepress.com. December 7, 2015. http://www.burlingtonfreepress.com/story/news/local/2015/12/07/boves-build-milton-sauce-plant/76917884/. பார்த்த நாள்: May 1, 2016.
- ↑ 4.00 4.01 4.02 4.03 4.04 4.05 4.06 4.07 4.08 4.09 4.10 "Biography, Richard Mazza". Legislature.vermont.gov. Vermont General Assembly. 2017. பார்க்கப்பட்ட நாள் August 25, 2019.