ரிச்சர்ட் மாசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரிச்சர்டு மாசா (Richard Mazza) (பிறப்பு: செப்டம்பர் 4, 1939) ஒரு அமெரிக்க வணிகர் மற்றும் வெர்மான்ட் பகுதியைச் சார்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் மக்களாட்சிக் கட்சியைச் சேர்ந்தவர். இவர் வெர்மான்ட் செனட்டினன் உறுப்பினராக 1985 முதல் பணியாற்றி உள்ளார். இவரே இந்த அவையின் மிக நீண்ட கால உறுப்பினர் ஆவார்.[1]

வாழ்க்கை வரலாறு[தொகு]

மாசா 1939 ஆம் ஆண்டு செப்டம்பர் 4 ஆம் நாள் பிறந்தார். இவர் வாழ்நாள் முழுவதும் கோல்செஸ்டரில் வாழ்ந்தவர் ஆவார்.[2] இவர் கோல்செஸ்டரின் பொதுப்பள்ளியில் தனது கல்வியைப் பெற்றார். வினூஸ்கி உயர்நிலைக் கல்விக்கூடத்தில் பட்ம் பெற்றார்.[2]

மாசா கோல்செஸ்டரில் ஒரு அங்காடியின் உரிமையாளராகவும், விற்பனையாளராகவும் இருந்தார்.[2] இவர் சாம்ப்ளெய்ன் பள்ளத்தாக்கின் இயக்குநர்கள் குழுவில் உறுப்பினராகவும் மூத்த குடிமக்களுக்கான வீட்டு வசதித்திட்டத்தின் தலைவராகவும் இருந்தார்.[2] இவர் வெர்மான்ட்டில் பிரதிநிதிகளின் சபையில் 1973 முதல் 1977 முடிய சட்டசபைக் குழுவின் உறுப்பினராகவும், போக்குவரத்துக் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.[2]

1984 ஆம் ஆண்டில், மாசா வெர்மான்ட் செனட்டிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார், மேலும் அவர் 1985 இல் தனது இடத்தைப் பிடித்ததில் இருந்து தொடர்ந்து பணியாற்றினார்.[2] 1991 ஆம் ஆண்டு முதல் இவர் போக்குவரத்துக் குழுவில் தலைவராக பதவி வகித்து வருகிறார்.[2] 1991 ஆம் ஆண்டு முதல் இவர் நிறுவனங்களின் குழுவில் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.[2]

மாசா சட்டமன்றத்தின் கூட்டுப் போக்குவரத்து மேற்பார்வைக் குழுவில் உறுப்பினராக இருந்துள்தோடு, தலைவராகவும் இருந்துள்ளார்.[2] 1997 முதல் இவர் செனட்டின் கமிட்டிகளில் மூன்றாவது உறுப்பினராக இருந்து வருகிறார். குழுக்களுக்கான குழுவானது வெர்மான்ட்டின் லெப்டினன்ட் கவர்னர், வெர்மான்ட் செனட்டின் தலைவர் மற்றும் முழு செனட்டால் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்றாவது உறுப்பினர் ஆகியோரை உள்ளடக்கியது.[2] குழுக்களுக்கான குழுவானது குழுவின் பணிகளைச் செய்வதோடு தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் குழுவின் எழுத்தர்களை நியமிக்கிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bove's Build Milton Sauce Plant". burlingtonfreepress.com. December 7, 2015. http://www.burlingtonfreepress.com/story/news/local/2015/12/07/boves-build-milton-sauce-plant/76917884/. பார்த்த நாள்: May 1, 2016. 
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 "Biography, Richard Mazza". Legislature.vermont.gov. Vermont General Assembly. 2017. பார்க்கப்பட்ட நாள் August 25, 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிச்சர்ட்_மாசா&oldid=3511142" இலிருந்து மீள்விக்கப்பட்டது