ராசுபைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராசுபைட்டு
Raspite
பொதுவானாவை
வகைஆக்சைடு கனிமம்
வேதி வாய்பாடுPbWO4
இனங்காணல்
படிக இயல்புநீள்வட்டம்
படிக அமைப்புஒற்றைச் சாய்வு
பிளப்பு{100} இல் தெளிவு
மோவின் அளவுகோல் வலிமை2.5-3
மிளிர்வுவிடாப்பிடியானது
கரைதிறன்HCl அமிலத்தில் சிதைவடையும்

ராசுபைட்டு (Raspite) என்பது PbWO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும் ஈய தங்குசுடேட்டு கனிமம் என்று இக்கனிமம் வகைப்படுத்தப்படுகிறது. [1] ஒற்றைசாய்வுடன் மஞ்சள் முதல் மஞ்சள் பழுப்பு வரையிலான நிறங்களில் இது ஒரு படிகமாகத் தோன்றுகிறது. நாற்கோண சுடோல்சைட்டு கனிமத்தின் தாழ்வெப்ப ஒற்றைச்சாய்வின் இரண்டாவது வடிவமாக இக்கனிமம் கருதப்படுகிறது. [1][2] 1897 ஆம் ஆண்டு ஆத்திரேலியாவிலுள்ள நியூசவுத் வேல்சு மாநிலத்தின் புரோக்கன் இயில் நகரத்தில் ராசுபைட்டு கண்டறியப்பட்டது. 1846-1907 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வாழ்ந்த செருமானிய-ஆத்திரேலிய வளவாய்ப்புத் தேடுநரும் இக்கனிமத்தை கண்டுபிடித்தவருமான சார்லசு ராசுப் நினைவாக இதற்கு ராசுபைட்டு எனப் பெயரிடப்பட்டது. [3]

இதையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Handbook of Mineralogy
  2. Mindat entry
  3. "Raspite Mineral Data", Webmineral.com, பார்க்கப்பட்ட நாள் September 12, 2010
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராசுபைட்டு&oldid=2976057" இலிருந்து மீள்விக்கப்பட்டது