உள்ளடக்கத்துக்குச் செல்

ரசிதா பீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ராசிதா பீ
தேசியம்இந்தியன்
சொந்த ஊர்போபால்
விருதுகள்கோல்டுமேன் சுற்றுசுழல் விருது (2004)

ரசிதா பீ ஓர் இந்திய சமூக செயற்பாட்டாளர். இவர் இந்தியாவின் மத்திய பிரதேசத்தின் போபாலை சேர்ந்தவர். 2004 ஆம் ஆண்டில் இவருக்கு சம்பா தேவி சுக்லாவுடன் இணைந்து கோல்ட்மேன் சுற்றுச்சூழல் விருது வழங்கப்பட்டது. 1984 ஆம் ஆண்டில் ஏற்பட்ட போபால் பேரழிவில் 20,000 பேர் உயிரழந்தனர். இந்த சம்பவத்தில் உயிர் இழந்தவர்களுக்கும், உயிர் தப்பிப்பிழைத்தவர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டி மக்களை திரட்டி போராடினர். இதற்காக தான் இந்த விருது வழங்கப்பட்டது. மேலும் இவர் போபால் பேரழிவிற்கு காரணமானவர்களுக்கு எதிராக தொடர் பிரச்சாரங்களையும், நீதிமன்றத்தில் வழக்குகளையும் நடத்திட ஏற்பாடு செய்தார். [1]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

ரசிதா பீ மத்திய அரசு அச்சகத்தில் ஜூனியர் பைண்டராக பணிபுரிகிறார். [2]

குறிப்புகள்

[தொகு]
  1. "Throwback Thursday: 2004 Goldman Prize Winners Rashida Bee and Champa Devi Shukla". Goldman Environmental Prize. பார்க்கப்பட்ட நாள் 18 March 2015.
  2. "Their story is the story of Bhopal - Livemint". www.livemint.com. பார்க்கப்பட்ட நாள் 2017-12-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரசிதா_பீ&oldid=3148521" இலிருந்து மீள்விக்கப்பட்டது