உள்ளடக்கத்துக்குச் செல்

மோல்ட் மேலாடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோல்ட் மேலாடை
பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ள மேலாடை
செய்பொருள்பொன்
உருவாக்கம்கிமு 1900–1600
கண்டுபிடிப்பு1833ல் மோல்ட், வேல்சு
தற்போதைய இடம்பிரித்தானிய அருங்காட்சியகம்

மோல்ட் மேலாடை என்பது, ஐரோப்பிய வெண்கலக் காலத்தில் கிமு 1900 - 1600 காலப் பகுதியைச் சேர்ந்த பொன் தகட்டால் செய்யப்பட்ட ஒரு பொருளாகும். இது 1833ல் வேல்சின் பிளின்ட்சயரில் உள்ள மோல்ட் என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இது பெரும்பாலும் சமயம் சார்ந்த சடங்குகளின் போது அணியப்படும் உடையின் ஒரு பகுதி என நம்பப்படுகிறது. இது தற்போது இலண்டனில் உள்ள பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ளது.

கண்டுபிடிப்பு

[தொகு]

இந்தப் பொன் மேலாடை குழியொன்றை மூடிக்கொண்டிருந்த[1] அல்லது கற்களுக்காக நிலத்தைத் தோண்டிக்கொண்டிருந்த[2]. வேலையாட்களால் 1833ல் கண்டுபிடிக்கப்பட்டது. இது பெயரீசுக் குன்று அல்லது கொப்ளின்சுக் குன்று எனப்படும் பகுதியில் உள்ள பிரின் இர் எல்லிலொன் எனப்படும் களத்தில் காணப்பட்ட வெண்கலக்காலப் புதை மேட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. இது உட்புறம் கல் வைத்துக் கட்டிய புதைகுழி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த ஒருவரின் எலும்புக்கூட்டில் காணப்பட்டது. எஞ்சியிருந்த எலும்புக்கூடு நொறுங்கிக் காணப்பட்டதுடன், மேலாடையும் நசுங்கியிருந்தது. முன்னர் இந்த மேலாடையில் 200-300 வரையான அம்பர் மணிகள் வரிசையாக இழைக்கப்படிருந்ததாகத் தெரிகிறது. ஆனால், இப்போது பிரித்தானிய அருங்காட்சியகத்தில் உள்ள மேலாடையில் ஒரேயொரு மணி மட்டுமே உள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Clarke et al. 278
  2. "The Mold gold cape". The British Museum. Archived from the original on 2008-10-10. பார்க்கப்பட்ட நாள் 2007-12-07.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோல்ட்_மேலாடை&oldid=3569158" இலிருந்து மீள்விக்கப்பட்டது