மொழி நகர்வு
மொழி நகர்வு (Language shift) என்பது ஒரு மொழிச் சமூகம் ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழிக்கு நகரும் செயலாக்கத்தைக் குறிக்கிறது. ஒரு மொழிச் சமூகத்தினரில் எத்தனை விழுக்காட்டினர் பிற மொழியை வீட்டில் பேசுகிறார்கள் என்பது மொழி நகர்வின் ஒர் அளவீடாக இருக்கிறது. மொழி நகர்வு ஏன், எப்படி நடக்கிறது, அதன் தாக்கங்கள் என்ன, அதை தடுப்பதற்கான வழிமுறைகள் எவை என்பது மொழியியல் துறையின் ஒரு முக்கிய ஆய்வுப் பிரிவு ஆகும்.
தமிழ்ச் சூழலில் மொழி நகர்வு
[தொகு]தமிழின் நீண்ட வரலாற்றில் பல்வேறு அரசியல் சமூக சூழ்நிலைகளில் தமிழில் இருந்து பிற மொழிகளுக்கும், பிற மொழிகளில் இருந்து தமிழுக்கும் மொழி நகர்வு நடந்துள்ளது. தமிழ் அரசர்கள் படையெடுப்புகளின் போது கிழக்காசியத் தீவுகளுக்குச் சென்ற தமிழர்கள் தமது மொழியிலிருந்த் பிற மொழிகளுக்கு நகர்ந்தனர். தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, சீசெல்சு போன்ற ஆப்பிரிக்க நாடுகளுக்குச் காலனித்துவ காலத்தில் கொண்டு செல்லப்பட்ட தமிழர்கள் காலப் போக்கில் தமிழ் மொழியிலிருந்து ஆங்கில மொழிக்கு நகர்ந்தனர். இலங்கையில் புத்தளம் போன்ற வட மேற்குப் பகுதியில் இருந்தோர், கொழும்புப் பகுதியில் நீண்ட காலம் இருந்தோர், சிங்களப் பகுதிகளில் இருந்தோர் காலப் போக்கில் சிங்கள மொழிக்கு மாறியது அண்மைக்காலத்தில் நடந்த மொழி நகர்வு ஆகும்.