மொலம்
Appearance
மொலம் (Mollem) நகரம் இந்தியாவின் கோவா மாநிலத்தில் அமைந்துள்ளது. இங்கு பகவான் மகாவீரர் காட்டுயிர்ச் சரணாலயம் மற்றும் மொல்லம் தேசியப் பூங்கா அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை 4A வின் அருகில் இந்நகரம் அமைந்துள்ளது. ஷயாத்ரி மலையடிவாரத்திலும் அன்மோட் மலை ஆரம்பிக்குமிடத்திலும் இக்கிராமம் உள்ளது. இந்நகரமானது சாங்க்யும் வட்டதிற்கு உட்பட்டது.[1] உலகின் பழமையான பாறைகள் இப்பகுதியில் காணப்படுகின்றன. அவை 3,600 பில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என ஆய்வில் தெரியவருகின்றன. [2]