உள்ளடக்கத்துக்குச் செல்

மேரி ஆர். கால்வெர்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேரி ஆர். கால்வெர்ட்
Mary R. Calvert
மேரி ஆர். கால்வெர்ட், கடவுச்சீட்டு ஒளிப்படம், 1927
பிறப்பு(1884-06-20)சூன் 20, 1884
நாழ்சுவில்லி, டென்னெசி
இறப்புசூன் 25, 1974(1974-06-25) (அகவை 90)
நாழ்சுவில்லி, டென்னெசி
குடியுரிமைஅமெரிக்கர்
துறைவானியலாளர், வான் ஒளிப்படவியலாளர்
பணியிடங்கள்யெர்க்கேசு வான்காணகம்
அறியப்படுவதுவ்டக்குப் பால்வழி வான்வரைபடம் and பால்வழியின் தேர்ந்தெடுத்த வட்டாரங்களின் ஒளிப்பட வான்வரைபடம்

மேரி உரோசு கால்வெர்ட் (Mary Ross Calvert) (ஜூன் 20, 1884[1] – ஜூன் 25, 1974[2]) ஓர் அமெரிக்க வானியல் மாந்தக் கணிப்பாளரும் வான் ஒளிப்படவியலாளரும் ஆவார்.

இவர்1905 இல் யெர்க்கேசு வான்காணகத்தில் தன் தாய்மாமனாகிய எட்வர்டு எமர்சன் பர்னார்டுவிடம் (1857–1923) உதவியளராகவும் கணிப்பாளராகவும் பணிபுரிய தொடங்கினார். அவர் அப்போதுசிகாகோ பல்கலைக்கழகத்தில் வானியல் பேராசிரியராகப் பணியாற்றி வந்துள்ளார் இவர் தான் பெர்னார்டு விண்மீனைக் கண்டுபிடித்தவர் ஆவார்.

பர்னார்டு 1923 இல் இறந்த பிறகு, யேர்க்கேசு வான்காணக ஒளிப்படங்களின் திரட்டு காப்பாளரும் உயர்நிலை உதவியாளரும் ஆனார் இவர் 1946 இல் ஓய்வு பெறும்வரை அங்கே பணிபுரிந்தார்.

பெர்னார்டின் வாழ்நாள் பணியாகிய பால்வழியின் தெரிவு செய்த பகுதிகளுக்கான ஒளிப்பட வான்படம் (A Photographic Atlas of Selected Regions of the Milky Way) எனும் அட்டவணை இவர 1923 இல் இறந்த பிறகு யெர்க்கேசு வான்காணக இயக்குந்ரான எட்வின் பி. பிராசுட்டாலும் கால்வெர்ட்டாலும் முடித்து 1927 இல் வெளியிடப்பட்டது. வானிய்ல் பெருங்களஞ்சியம் இதை ஒரு அரிய "முதன்மைப்பணி" யாகக் கூறுகிறது.[3]

இவர் 1974 இல் டென்னெசி, நாழ்சுவில்லியில் இறந்தார்.

வெளியீடுகள்

[தொகு]
  • Atlas of the Northern Milky Way (with Frank Elmore Ross), University of Chicago Press (1934)

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேரி_ஆர்._கால்வெர்ட்&oldid=4030008" இலிருந்து மீள்விக்கப்பட்டது