உள்ளடக்கத்துக்குச் செல்

முறிவு நிலை விளைவுப் பகுப்பாய்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முறிவு நிலை விளைவுப் பகுப்பாய்வு (Failure mode and effects analysis, FMEA) என்பது "உற்பத்திப்பொருள் மேம்பாடு" மற்றும் "செய்பணி மேலாண்மை" யிலும் பயன்படக்கூடிய ஒரு செய்முறையாகும்.[1][2][3]

பொருள் வடிவமைப்பாலைகள் தாங்களும், தங்கள் நிறுவனங்கள் மற்றும் ஒத்த சந்தையில் உள்ள இதர நிறுவனங்கள் சந்தித்த இடர்பாடுகள் மற்றும் தோல்விகளின் அனுபவத்தை கொண்டு புதிய பொருள்களை உருவாக்கும்போது அவ்விதனமான தோல்விகளை முன்கூட்டியே அறிந்து அதை தவிர்க்க உதவக்கூடிய ஒரு செய்முறை “முறிவு நிலை விளைவுப் பகுப்பாய்வு”.

1960களில் ஐக்கிய அமெரிக்காவின் தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிருவாகம் (நாசா) இம்மாதிரியான ஒரு செய்முறையைப் பின்பற்றியது. பிற்காலங்களில் பல ஊர்தித்துறை நிறுவனங்களும் தங்களுடைய தரமேம்பாட்டிற்காக இதனைப் பின்பற்றத் தொடங்கின.

அடிப்படைக் குறிச்சொற்கள்

[தொகு]
முறிவு

ஓரு சாதனம் அதனுடைய கருதப்படும் செயலிலிருந்து நழுவுதல்.

முறிவு நிலை

எவ்வாறு முறிவு ஏற்பட்டது என்பதை விளக்குதல்.

முறிவின் விளைவு

முறிவினால் ஏற்படக்கூடிய உடனடி தொடர்விளைவுகள்.

முறிவுக்கான காரணங்கள்

வடிவமைப்பு, மேம்படுதுதல், உற்பத்தி, செயல்முறை, இணைப்பு, தரம் ஆகியவற்றில் ஏற்படும் குறைபாடுகள்.

தீவிரம்

முறிவு நிலையின் தொடர்விளைவுகளால் ஏற்படக்கூடிய பாதிப்பின் தன்மை.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Rausand, Marvin; Høyland, Arnljot (2004). System Reliability Theory: Models, Statistical Methods, and Applications (2nd ed.). Wiley. p. 88.
  2. Tay K. M.; Lim C.P. (2008). "On the use of fuzzy inference techniques in assessment models: part II: industrial applications". Fuzzy Optimization and Decision Making 7 (3): 283–302. doi:10.1007/s10700-008-9037-y. http://ir.unimas.my/id/eprint/3043/1/On%20the%20use.pdf. 
  3. United States Department of Defense (9 November 1949). MIL-P-1629 – Procedures for performing a failure mode effect and critical analysis. Department of Defense (US). MIL-P-1629.