உள்ளடக்கத்துக்குச் செல்

முயூக்கெல் லாகசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முயூக்கெல் லாகசு (Müggel Lacus) என்பது சனி கோளின் மிகப்பெரிய துணைக்கோளான டைட்டன் நிலவில் காணப்படும் எண்ணற்ற ஐதரோகார்பன் ஏரிகளில் இதுவும் ஒரு ஏரியாகும் [1]. 84.44° மற்றும் 3203.5° மே என்ற அடையாள ஆள்கூறுகளில் டைடனின் உலகத்தில் இந்த ஏரி காணப்படுகிறது[2] நீர்ம ஐதரோகார்பன்களான திரவ ஈத்தேனும் மீத்தேனும் [3] சேர்ந்து 170 கிலோமீட்டர் விட்டத்தில் இந்த ஏரியை உருவாக்கியுள்ளன. கேசின் விண்வெளி ஆய்வு விண்கலம் இந்த ஏரியைக் கண்டுபிடித்தது. பூமியில் உள்ள செருமனி நாட்டிலுள்ள பெர்லினின் முயூக்கெல்சீ ஏரியின் நினைவாக டைட்டனின் இந்த ஏரிக்கு முயூக்கெல் லாகசு பெயரிடப்பட்டது. 2013 ஆம் ஆண்டு திசம்பர் 3 இல் உலகளாவிய வானியல் ஒன்றியம் இப்பெயரை அங்கீகரித்தது[2] .

மேற்கோள்கள்

[தொகு]
  1. Map of the liquid bodies in the north polar region of Titan.
  2. 2.0 2.1 "Müggel Lacus". USGS planetary nomenclature page. USGS. பார்க்கப்பட்ட நாள் 2015-05-23. {{cite web}}: External link in |work= (help)
  3. Coustenis, A.; Taylor, F. W. (21 July 2008). Titan: Exploring an Earthlike World. World Scientific. pp. 154–155. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-981-281-161-5. இணையக் கணினி நூலக மைய எண் 144226016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முயூக்கெல்_லாகசு&oldid=2174111" இலிருந்து மீள்விக்கப்பட்டது