முடிப்பிநாயனபள்ளி பாறை ஓவியங்கள்
முடிப்பிநாயனபள்ளி பாறை ஓவியங்கள் தமிழ்நாட்டின் கிருட்டிணகிரி மாவட்டத்தில் முடிப்பிநாயனபள்ளி என்னும் இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாறை ஓவியங்கள் ஆகும். கிருட்டிணகிரி- பெங்களூர் சாலையில், கிருட்டிணகிரியிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் பிரியும் கிளை சாலையில் எட்டு கிலோ மீட்டர் சென்றால் பஸ்தரபள்ளி என்ற இடத்தை அடையலாம். பஸ்தரபள்ளியில் இருந்து தெற்கு முகமாக சுமார் ஐந்து கிலோமீட்டர் சென்றால் இம் மலைப் பகுதியை அடையலாம். முடிப்பிநாயனபள்ளி மலையில் இயற்கையாக அமைந்த இரு குகைள் உள்ளன. இவற்றில் ஒன்று சன்யாசி கெவி என்றும் மற்றொன்று குழம்பி குண்டு என்றும் அழைக்கபடுகின்றன.[1]
குழம்பி குண்டு குகையில் வெள்ளைச் சுண்ணத்தால் வரையப்பட்ட ஓவியத் தொகுப்பு உள்ளது. ஒரு மனித உருவம், ஒரு வில்வளைவு, ஒரு அம்பு முதலியன ஒரு குறியீட்டு தன்மையில் வரையப்பட்டுள்ளன. மேலும் மூன்று செங்குத்துக் கோடுகள் ஒரு புள்ளியில் சந்திக்கும்படி வரையபட்டுள்ளன.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 த. பார்திபன், தென்பெண்ணை ஆற்றங்கரைக் கிருஷ்ணகிரி மாவட்ட வரலாறு பகுதி-II சங்க காலம். ஸ்ரீ விவேகானந்தர் கொடை மற்றும் அறகட்டளை, தருமபுரி. 2010 ஏப்ரல். p. 157.
{{cite book}}
: Check date values in:|year=
(help)