முகுல் சர்மா
முகுல் சர்மா Mukul Sharma | |
---|---|
பிறப்பு | 1949/1950 |
இறப்பு | (அகவை 69) புது தில்லி, இந்தியா |
தொழில் | எழுத்தாளர், பத்திரிகையாளர் |
தேசியம் | இந்தியா |
கல்வி நிலையம் | அசுதோசு கல்லுரி |
துணைவர் | அபர்ணா சென் பினிடா மொகந்தி |
பிள்ளைகள் | 2, குழந்தைகள் |
முகுல் சர்மா (Mukul Sharma) இந்தியாவைச் சேர்ந்த ஓர் எழுத்தாளராவார். புது தில்லியைச் சேர்ந்த இவர் பத்திரிகையாளராக பல்வேறு செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைககளில் எழுதியுள்ளார். அறிவியலில் இருந்து திரைப்படங்கள் வரை மாறுபட்ட துறைகள் பற்றிய கட்டுரைகளையும் கதைகளையும் எழுதினார். இவரது சில சிறுகதைகள் திரைப்படங்களாகவும் எடுக்கப்பட்டன. சர்மா சில திரைப்படங்களில் நடித்தார்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]சர்மா ஒரு இராணுவ அதிகாரியின் குடும்பத்தில் பிறந்தார். இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் ஆறு பள்ளிகளில் படித்தார். [1] கொல்கத்தாவில் உள்ள ஆசுதோசு கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றார். [1] [2]
படிப்பை முடித்த பிறகு சர்மா அறிவியலில் ஆர்வம் வளர்த்தார். பல்வேறு செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளுக்கான அறிவியல் முதல் திரைப்படங்கள் வரையிலான மாறுபடும் துறைகள் தொடர்பான கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். [1] [3] 1986 ஆம் ஆண்டு மும்பைக்குச் சென்று சயின்சு டுடே என்ற பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றினார். [2] [3] சர்மா மைண்ட்சுபோர்ட் என்ற நெடுந்தொடர் ஒன்றை எழுதினார். இத்தொடர் முதலில் தி இல்லசுட்ரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியா என்ற இதழிலும் பின்னர் தி சண்டே டைம்சு என்ற இதழிலும் வெளிவந்தது. 25 ஆன்டுகளாக வெளியிடப்பட்ட இந்நெடுந்தொடர் 2007 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 5 அன்று முடிவடைந்தது.[1] [3] சர்மா அறிவியல் புனைகதைகளையும் இயற்கைக்கு அப்பாற்பட்ட மீயியற்கை புனைகதைகளையும் எழுதினார். [4]
தனது முதல் மனைவி அபர்ணா சென்னின் 1981 ஆம் ஆண்டுத் திரைப்படமான 36 சவுரிங்கி லேன் படத்தில் சிறிய வேடத்தில் தோன்றினார்.[5] 1984 ஆம் ஆண்டில் சென்னின் திரைப்படமான பரம என்ற படத்தில் நடிகராக அறிமுகமானார். இத்திரைப் படத்தில் ராகுல் என்ற இளம் புகைப்படக் கலைஞராக சர்மா நடித்தார். [1] [3]
சர்மாவின் பல சிறுகதைகள் திரைப்படங்களாக எடுக்கப்பட்டன. 2013 ஆம் ஆண்டு வெளியான மீயியற்கை திகில் படமான ஏக் தி தயான் என்ற திரைப்படம் சர்மாவின் மொபியசு டிரிப்சு என்ற சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட படமாகும். இவரது மகள் கொங்கோனா சென் சர்மா இத்திரைப்படத்தில் நடித்திருந்தார்.[6] [1] [3] விசால் பரத்வாச்சு இணைத் தயாரிப்பாளராக இத்திரைப்படத்தில் பணியாற்றினார். இதைத் தவிர பரத்வாச்சு மேலும் இரண்டு படங்களை தயாரித்தார்: கனவு வரிசை என்ற திரைப்படத்தில் ஒரு பெண் விழித்திருக்க வேண்டும் என்று கனவு காண்கிறாள் ஆனால் எழுந்திருக்கவில்லை என்பது போன்ற ஒரு கதையாகும். அதே போல் கோசுட்சு என்ற திரைப்படம் ஒரு கொலை மர்மம் சார்ந்த திரைப்படமாக அமைந்திருந்தது. [1] [3] கொங்கோனா சென் சர்மா இயக்கிய 2016 ஆம் ஆண்டு திரைப்படம் எ டெத் இன் தி குஞ்ச் என்ற திரைப்படமும் சர்மாவின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டதாகும். மெக்லசுகிச்கஞ்சு என்ற சிறிய கிராமத்திற்கு வருகை தந்தபோது நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்.[3]
சர்மா 1 மார்ச் 2019 அன்று புது தில்லியில் இறந்தார். [3]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]சர்மா அபர்ணா சென் என்பவரை மணந்தார். இவர்களுக்கு கமலினி சாட்டர்சி மற்றும் கொங்கோனா சென் சர்மா என்ற இரண்டு மகள்கள் இருந்தனர். பின்னர் இவர்கள் விவாகரத்து செய்து கொண்டனர். சர்மா இரண்டாவதாக பினிதாவை மணந்து கொண்டார். [3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 Nadkarni, Vithal (2019-03-01). "Mukul Sharma, who straddled science and the arts, passes away". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2020-08-30.Nadkarni, Vithal (1 March 2019). "Mukul Sharma, who straddled science and the arts, passes away". The Times of India. Retrieved 30 August 2020.
- ↑ 2.0 2.1 "Polymath and science writer Mukul Sharma passes away". DNA India. 2019-03-01. பார்க்கப்பட்ட நாள் 2020-08-30."Polymath and science writer Mukul Sharma passes away". DNA India. 1 March 2019. Retrieved 30 August 2020.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 3.7 3.8 "Mukul Sharma, science writer, polymath, storyteller, passes away at 69". Firstpost. 2019-03-01.
- ↑ "In Good Spirit". The Indian Express (in ஆங்கிலம்). 2017-07-28. பார்க்கப்பட்ட நாள் 2020-08-30.
- ↑ "Mukul Sharma, science writer and father of Konkana Sen Sharma, passes away". India Today. 2019-03-01. பார்க்கப்பட்ட நாள் 2020-08-30.
- ↑ "Bollywood movies based on Short stories". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 2020-08-30.
புற இணைப்புகள்
[தொகு]- Mukul Sharma at IMDb