மீனா அலெக்சாந்தர்
மீனா அலெக்சாந்தர் | |
---|---|
பிறப்பு | அலகாபாத், இந்தியா | 17 பெப்ரவரி 1951
இறப்பு | 21 நவம்பர் 2018 நியூயார்க் | (அகவை 67)
தொழில் | எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர் |
இணையதளம் | |
meenaalexander |
மீனா அலெக்சாந்தர் (Meena Alexander, 17 பெப்ரவரி 1951 – 21 நவம்பர் 2018)[1] இந்தியாவைச் சேர்ந்த ஆங்கிலக் கவிஞர், எழுத்தாளர், பேராசிரியர் ஆவார்.[2]
பிறப்பும் படிப்பும்
[தொகு]இந்தியாவில் அலகாபாத்தில் பிறந்த மீனா அலெக்சாந்தர் இந்தியாவிலும் சூடானிலும் வளர்ந்தார். இவர் கேரளா சிரியன் கிறித்தவக் குடும்பத்தைச் சேர்ந்தவர். நியூயார்க்கு நகரத்தில் ஹண்டர் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றினார்.
படைப்புப் பணிகள்
[தொகு]கவிதைகள், கட்டுரைகள், கதைகள், திறனாய்வுக் கட்டுரைகள் எனப் பலவற்றை ஆக்கியுள்ளார். பல விருதுகள் பெற்றுள்ளார். நம்பள்ளி ரோட் மேன்ஹாட்டான் மியூசிக் ஆகிய புதினங்களும் கவிதைத் தொகுப்பும் எழுதியுள்ளார். மீனா அலெக்சாந்தரின் கவிதைகளும் படைப்புக்களும் பல் துறையைச் சார்ந்ததாகவும் உணர்ச்சித் தூண்டல் கொண்டதாகவும் உள்ளன. பால்ட் லைன்ஸ் என்ற தன் வரலாறும் எழுதினார். ஜெயா மகபத்ரா, கமலாதாஸ் ஆகிய ஆங்கில எழுத்தாளர்கள் இவருடைய மானசீக ஆசிரியர்களாவர். மீனா அலெக்சாந்தருடைய கவிதைகள் மலையாளம், இந்தி, இத்தாலி, பிரஞ்சு, செருமன் போன்ற மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Staff, Scroll. "Poet, essayist Meena Alexander dies at 67". பார்க்கப்பட்ட நாள் 24 November 2018.
- ↑ https://www.poets.org/poetsorg/poet/meena-alexander