மீனா அலெக்சாந்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மீனா அலெக்சாந்தர்
பிறப்பு(1951-02-17)17 பெப்ரவரி 1951
அலகாபாத், இந்தியா
இறப்பு21 நவம்பர் 2018(2018-11-21) (அகவை 67)
நியூயார்க்
தொழில்எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர்
இணையதளம்
meenaalexander.com

மீனா அலெக்சாந்தர் (Meena Alexander, 17 பெப்ரவரி 1951 – 21 நவம்பர் 2018)[1] இந்தியாவைச் சேர்ந்த ஆங்கிலக் கவிஞர், எழுத்தாளர், பேராசிரியர் ஆவார்.[2]

பிறப்பும் படிப்பும்[தொகு]

இந்தியாவில் அலகாபாத்தில் பிறந்த மீனா அலெக்சாந்தர் இந்தியாவிலும் சூடானிலும் வளர்ந்தார். இவர் கேரளா சிரியன் கிறித்தவக் குடும்பத்தைச் சேர்ந்தவர். நியூயார்க்கு நகரத்தில் ஹண்டர் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றினார்.

படைப்புப் பணிகள்[தொகு]

கவிதைகள், கட்டுரைகள், கதைகள், திறனாய்வுக் கட்டுரைகள் எனப் பலவற்றை ஆக்கியுள்ளார். பல விருதுகள் பெற்றுள்ளார். நம்பள்ளி ரோட்  மேன்ஹாட்டான் மியூசிக் ஆகிய புதினங்களும் கவிதைத் தொகுப்பும் எழுதியுள்ளார். மீனா அலெக்சாந்தரின் கவிதைகளும் படைப்புக்களும் பல் துறையைச் சார்ந்ததாகவும் உணர்ச்சித் தூண்டல் கொண்டதாகவும் உள்ளன. பால்ட் லைன்ஸ் என்ற தன் வரலாறும் எழுதினார். ஜெயா மகபத்ரா, கமலாதாஸ் ஆகிய ஆங்கில எழுத்தாளர்கள் இவருடைய மானசீக ஆசிரியர்களாவர். மீனா அலெக்சாந்தருடைய கவிதைகள் மலையாளம், இந்தி, இத்தாலி, பிரஞ்சு, செருமன் போன்ற மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Staff, Scroll. "Poet, essayist Meena Alexander dies at 67". பார்க்கப்பட்ட நாள் 24 November 2018.
  2. https://www.poets.org/poetsorg/poet/meena-alexander
"https://ta.wikipedia.org/w/index.php?title=மீனா_அலெக்சாந்தர்&oldid=2608027" இலிருந்து மீள்விக்கப்பட்டது