மார்க்லைட்டு
மார்க்லைட்டு Marklite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | கார்பனேட்டு கனிமம் |
வேதி வாய்பாடு | Cu5(CO3)2(OH)6 • 6H2O |
இனங்காணல் | |
நிறம் | நீலம் |
படிக அமைப்பு | ஒற்றைச்சாய்வு |
மேற்கோள்கள் | [1] |
மார்க்லைட்டு (Marklite) என்பது Cu5(CO3)2(OH)6 • 6H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். துபிங்கன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த செருமானிய கனிமவியலாளர் கிரிகோர் மார்கல் இக்கனிமத்தைக் கண்டுபிடித்தார்[2]. இவரை நினைவூட்டும் விதமாகவே கனிமத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது. தென்மேற்கு செருமனியில் உள்ள பிளாக் பாரசுட்டு மலைகளில் பிரீட்ரிக்-கிறிசுடியன் சுரங்கத்தின் குவியல்களில் மார்க்லைட்டின் மாதிரி வகையை மார்கல் கண்டறிந்தார்[3]. மார்கல் மிருதுவான பாறையியல் மற்றும் புவி வேதியியலில் நிபுணத்துவம் பெற்றவராவார். பிளாக் பாரசுட்டு பகுதியின் நீர் வெப்ப தாதுப் படிவுகளைப் பற்றி ஆய்வு செய்தார்[4]. செக் குடியரசின் அறிவியல் அகாடமியில் பணியாற்றிய இயற்பியல் நிறுவனத்தின் யாகுப் பிளாசில் மற்றும் அவருடன் பணிபுரியும் சக பணியாளர்கள் மார்க்லைட்டின் கட்டமைப்பை அடையாளம் கண்டனர்[5].
மார்க்லைட்டுப் படிகங்கள் 0.2 மி.மீ நீளமான மெல்லிய தகடுகள் போல உள்ளன. கியார்கைட்டு, கிளாரைட்டு, குப்ரோவார்ட்டினைட்டு அசூரைட்டு மாலகைட்டு போன்ற கனிமங்களை ஒத்த கனிமமாக மார்க்லைட்டும் காணப்படுகிறது[4].
பன்னாட்டு கனிமவியல் சங்கம் மார்க்லைட்டு கனிமத்தை Mkl[6] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
கிடைக்குமிடம்
[தொகு]செருமனி நாட்டின் பிரீட்ரிக்-கிறிசுட்டியன் சுரங்கம், வைல்டுசாப்பாச்சு சமவெளி, பிளாக் பாரசுட்டு வனப்பகுதி, பேதென்-உர்டெம்பெர்க்கு ஆகிய இடங்களில் மார்க்லைட்டு கிடைக்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Braunerite: Braunerite mineral information and data". www.mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2017-08-25.
- ↑ "New Mineral Listing | Carbon Mineral Challenge". mineralchallenge.net (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2017-09-05. பார்க்கப்பட்ட நாள் 2017-09-04.
- ↑ "Carbon Mineral Challenge Update Spring 2016: Four New Minerals Found | Carbon Mineral Challenge". mineralchallenge.net (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-09-04.
- ↑ 4.0 4.1 "Marklite: Marklite mineral information and data". www.mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2017-09-04.
- ↑ "New Minerals and Mineralogy of the 21st Century International Scientific Symposium Jachymov 2016". Archived from the original on 2016-12-20. பார்க்கப்பட்ட நாள் 2020-04-09.
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. https://www.cambridge.org/core/journals/mineralogical-magazine/article/imacnmnc-approved-mineral-symbols/62311F45ED37831D78603C6E6B25EE0A.