உள்ளடக்கத்துக்குச் செல்

மானாட மயிலாட

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மானாட மயிலாட
உருவாக்கம்கலைஞர் தொலைக்காட்சி
இயக்கம்கலா (நடன ஆசிரியர்)
வழங்கல்சஞ்சீவ்
கீர்த்தி
நீதிபதிகள்கலா
குஷ்பு
நமீதா
ரம்பா
பிருந்தா
சிம்ரன்
நாடுஇந்தியா
தொடர்கள்4
தயாரிப்பு
ஓட்டம்2 மணி 30 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைகலைஞர் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்15 செப்டம்பர் 2007 –
தொடர்கிறது
வெளியிணைப்புகள்
இணையதளம்

மானாட மயிலாட என்பது இந்தியாவிலுள்ள தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் நடனப் போட்டி நிகழ்ச்சி ஆகும்.[1][2][3]

இந்நிகழ்ச்சி செப்டம்பர் 2007 முதல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு தொடர் நிகழ்ச்சி ஆகும். ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகும். இப்பொழுது நான்காவது பாகம் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது

வித்தியாசமான அரங்க அமைப்புகளாலும் அதற்கேற்ற விறுவிறுப்பான நடன அமைப்பினாலும் உலகெங்கும் உள்ள தமிழ் மக்களிடையே பிரபலமான நிகழ்ச்சி ஆகும்.

மழை பொழியும் அரங்கம், பனி பொழியும் அரங்கம், பாலைவனம், கடற்கரை, நீர்வீழ்ச்சி, சூரியகாந்திப் பூக்கள் தோட்டம், விமானம் மற்றும் விமான நிலையம் போன்ற அரங்க அமைப்புகள் பார்வையாளர்களால் வெகுவாக ரசிக்கப்பட்டன.

இது பிரித்தானியாவில் ஒளிபரப்பப்படும் மேற்கத்திய நடனப்போட்டி நிகழ்ச்சியான en: Strictly Come Dancing என்ற நிகழ்ச்சியின் தழுவல் ஆகும்.

நிகழ்ச்சியின் வடிவம்

[தொகு]

இது பெரும்பாலும் சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்குபெறும் நடன நிகழ்ச்சி ஆகும். நடனப் போட்டியாளர்கள் இருவர், நடன இயக்குனர் ஒருவர் இணைந்து ஒரு குழுவாக போட்டியிடுவர். ஏறத்தாழ பத்து குழுக்கள் போட்டியில் பங்கு பெரும்.

போட்டியில் வெற்றி பெறும் முதல் இணைக்கு 10 இலட்சம் இந்திய ரூபாய்களும், இரண்டாவது மற்றும் மூன்றாவது இணைகளுக்கு முறையே 5 மற்றும் 3 இலட்சம் ரூபாய்களும் பரிசாக வழங்கப்படும்.

தொகுப்பாளர்கள்

[தொகு]
ஆண்டுகள் பாகங்கள் தொகுப்பாளர்
2007 முதல் 1 முதல் சஞ்சீவ்
2007 முதல் 1 முதல் கீர்த்தி

நடுவர்கள்

[தொகு]
ஆண்டுகள் பாகங்கள் நடுவர்
2007 முதல் 1 முதல் கலா
2008 முதல் 2 முதல் குஷ்பு
2007-2008, 2009 1 மற்றும் 4 நமீதா
2008-2009 2 மற்றும் 3 ரம்பா
2007-2008 1 பிருந்தா
2007 1 சிம்ரன்
2007 1 கே.எஸ்.ரவிக்குமார்

நடன இயக்குனர்கள்

[தொகு]

சந்தோஷ்(சேண்டி), பிரேம், மணி, ரமேஷ், சந்துரு, ரகு, பாலா, ஆண்டோ, ஸ்ரீநாத், ராஜேஷ்

இவர்கள் நடன இயக்குனர் கலாவின் கலாலயா நடனப் பள்ளியின் மாணவர்கள் ஆவர்.

வெற்றி பெற்றவர்கள்

[தொகு]
பாகம் முதல் பரிசு இரண்டாம் பரிசு மூன்றாம் பரிசு
1 சதீஷ் - ஜெயஸ்ரீ ராகவ் - ப்ரீத்தா ராஜ்காந்த் - பாவனா
2 பாலா - பிரியதர்ஷினி கனேஷ்கர் - ஆர்த்தி லோகேஷ் - சுஜிபாலா
3 ரஞ்சித் - ஐஸ்வர்யா ஃபயாஸ் - தர்ஷினி அசார் - ரஜினி

பாகம் 1

[தொகு]

மானாட மயிலாட முதல் பாகத்தில் நடுவர்களாக நடன இயக்குனர்கள் கலா மற்றும் பிருந்தா சகோதரிகள் பங்கேற்றனர். இவர்களுடன் சிம்ரன் சில வாரங்களுக்கு நடுவராக இருந்தார். பின் சிம்ரன் மாற்றப்பட்டு நமீதா நடுவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இயக்குனர் கே.எஸ்.இரவிக்குமார் ஒரு வாரத்திற்கு மட்டும் நடுவராக வந்தார்.

இந்நிகழ்ச்சியில் நடிகைகள் மனோரமா, பூஜா, பிரியாமணி, சந்தியா மற்றும் கனிகா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மானாட மயிலாட வெற்றி விழாவில் நடிகர் சூர்யா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வெற்றி பெற்ற இணைகளுக்குப் பரிசுகள் வழங்கினார்.

போட்டியாளர்கள்

[தொகு]
எண் இணை நடன இயக்குன்ர் தேர்ச்சி
1 சதீஷ் - ஜெயஸ்ரீ சந்தோஷ்(சேண்டி) முதல் பரிசு
2 ராகவ் - ப்ரீத்தா இரண்டாம் பரிசு
3 ராஜ்காந்த் - பாவனா மூன்றாம் பரிசு
4 ஜார்ஜ் - சுஜிபாலா ஆறுதல் பரிசு - ரூ.50000
5 ராஜ்குமார் - அர்ச்சனா அரையிறுதி
6 கோல்டன் சுரேஷ் - காயத்ரி ப்ரியா அரையிறுதி
7 நிதிஷ் - ஸ்வேதா
8 பிரபாகர் - காஜல்

நடனச் சுற்றுகள்

[தொகு]
தேதி சுற்று
7 அக்டோபர் 2007 1960
21 அக்டோபர் 2007 வெஸ்டர்ன்
28 அக்டோபர் 2007 எக்ஸ்சேஞ்ச்
4 நவம்பர் 2007 கமல், ரஜினி
8 நவம்பர் 2007 தீப ஒளி திருநாள் சிறப்பு
11 நவம்பர் 2007 உடல் குறைபாடுடையவர்கள்
18 நவம்பர் 2007 இளையராசா
25 நவம்பர் 2007 நகைச்சுவை
2 டிசம்பர் 2007 ஏ.ஆர்.ரகுமான்
9 டிசம்பர் 2007 2006 -2007
16 டிசம்பர் 2007 கான்செப்ட்
23 டிசம்பர் 2007 ஐடெம் சாங்
30 டிசம்பர் 2007 மறு-நுழைவு - திருவிழா
6 சனவரி 2008 மறு-நுழைவு - ரீமிக்ஸ்
13 சனவரி 2008 பொங்கல் சிறப்பு
20 சனவரி 2008 அரையிறுதி - வெளிநாட்டில் படமாக்கப்பட்டப் பாடல்கள்
27 சனவரி 2008 அரையிறுதி - நடன இயக்குனர்கள்

பாகம் 2

[தொகு]

மானாட மயிலாட இரண்டாம் பாகத்தில் கலா, குஷ்பு மற்றும் ரம்பா ஆகியோர் நடுவர்கள் ஆவர்.

போட்டியாளர்கள்

[தொகு]
எண் இணை நடன இயக்குன்ர் தேர்ச்சி
1 பாலா - பிரியதர்ஷினி மணி முதல் பரிசு
2 கணேஷ்கர் - ஆர்த்தி பிரேம் இரண்டாம் பரிசு
3 லோகேஷ் - சுஜிபாலா ஆண்டோ மூன்றாம் பரிசு
4 கார்த்திக் - நீபா இறுதிச்சுற்று
5 கோகுல்நாத் - கவி இறுதிச்சுற்று
6 ஆகாஷ் - ஸ்ருதி இறுதிச்சுற்று
7 சாய்பிரசாத் - ஸ்வேதா அரையிறுதி
8 சக்தி சரவணன் - யோகினி அரையிறுதி
8 மதன் - பிரியங்கா/ரேகா
10 சுரேஷ்வர் - மது
11 ரஞ்சித் - ஐஸ்வர்யா சேண்டி

நடனச் சுற்றுகள்

[தொகு]
தேதி சுற்று
16 மார்ச் 2008 அறிமுகம்
23 மார்ச் 2008 குத்துப்பாட்டு
30 மார்ச் 2008 டூயட்
06 ஏப்ரல் 2008 ப்ராப்பர்ட்டி
13 ஏப்ரல் 2008 1960
20 ஏப்ரல் 2008 வெஸ்டர்ன்
27 ஏப்ரல் 2008 எக்ஸ்சேஞ்ச்
04 மே 2008 ரஜினி - விஜய்
11 மே 2008 பாலச்சந்தர் - பாரதிராஜா
1 ஜூன் 2008 நகைச்சுவை
8 ஜூன் 2008 கமல் - அஜீத்
15 ஜூன் 2008 எக்ஸ்ப்ரஸன்
22 ஜூன் 2008 ஸ்பெஷல் சாங்
29 ஜூன் 2008 சோலோ
06 ஜூலை 2008 ஸ்னோஃபால்
13 ஜூலை 2008 ரீமிக்ஸ்
20 ஜூலை 2008 கொண்டாட்டம்
27 ஜூலை 2008 ஃப்ரீ ஸ்டைல்
03 ஆகஸ்டு 2008 க்ளப்மிக்ஸ் - ஃப்ரண்ட்ஸிப்
10 ஆகஸ்டு 2008 நடுவர்கள்
17 ஆகஸ்டு 2008 திகில்
24 ஆகஸ்டு 2008 நடன இயக்குனர்கள்
31 ஆகஸ்டு 2008 வினாயகர் சதுர்த்தி சிறப்பு
14 செப்டம்பர் 2008 ஓராண்டு முடிவு கொண்டாட்டம்
28 செப்டம்பர் 2008 பாலைவனம்

பாகம் 3

[தொகு]

மானாட மயிலாட மூன்றாம் பாகத்தில் கலா, குஷ்பு மற்றும் ரம்பா ஆகியோரே நடுவர்களாகத் தொடர்ந்தனர்.

போட்டியாளர்கள்

[தொகு]
எண் இணை நடன இயக்குன்ர் தேர்ச்சி
1 ரஞ்ஜித் - ஐஸ்வர்யா முதல் பரிசு
2 பயாஸ் - தர்ஷினி இரண்டாம் பரிசு
3 அசார் - ரஜினி மூன்றாம் பரிசு
4 ராம் - பிரியா இறுதிச்சுற்று
5 அருண் - அப்சரா இறுதிச்சுற்று
6 சைதன்யா - ராகவி அரையிறுதி
7 நிவாஸ் - கிருத்திகா அரையிறுதி
8 ராகவா - சுவேதா அரையிறுதி
8 முரளி - நிஷா
10 அஸ்வந்த் - சுகுணா
11 அஜய் - ரேகா

பாகம் 4

[தொகு]

மானாட மயிலாட நான்காம் பாகத்தில் கலா, குஷ்பு மற்றும் நமீதா ஆகியோர் நடுவர்கள் ஆவர்.

இந்தப் பாகத்தில் முதல் சில வாரங்களுக்குப் பின்னரே போட்டிக்கான இணைகள் தேர்வு செய்யப்பட்டனர். அதுவரை ஆண்-ஆண் மற்றும் பெண்-பெண் என்று ஒரு பாலினத்தாரே இணைந்து நடனம் ஆடினர்.

மனோ - சுகுமார் இணை நகைச்சுவை நிகழ்ச்சிகளை வழங்குவதற்காக, போட்டியாளர்களாக இல்லாமல் சிறப்பு இணையாக இந்த பாகம் முழுவதும் தொடர்கிறார்கள்.

போட்டியாளர்கள்

[தொகு]
எண் இணை நடன இயக்குன்ர் தேர்ச்சி வாக்களிக்கும் முறை
1 மனோ - சுகுமார் பிரேம் சிறப்பு இணை - பாகம் 4 முழுவதும்
2 மகேஷ் - பிரியதர்ஷினி இணை வெளியேற்றப்பட்டுள்ளது
3 யுவராஜ் - தீபா இணை வெளியேற்றப்பட்டுள்ளது
5 கார்த்திக் - சௌந்தர்யா அரையிறுதி சுற்றில் இணை விலகிக்கொண்டது
4 குமரன் - அப்சரா அரையிறுதி சுற்றில் இணை வெளியேற்றப்பட்டுள்ளது
6 கிரண் - பூஜா இறுதிச்சுற்று MM4<Space>KP
56767778 எண்ணுக்கு SMS அனுப்புக
7 கோகுல் - நீபா இறுதிச்சுற்று MM4<Space>KN
56767778 எண்ணுக்கு SMS அனுப்புக
8 லோகேஷ் - ஸ்வேதா இறுதிச்சுற்று MM4<Space>LS
56767778 எண்ணுக்கு SMS அனுப்புக
9 நிவாஸ் - கிருத்திகா சந்தோஷ்(சேண்டி) இறுதிச்சுற்று MM4<Space>NK
56767778 எண்ணுக்கு SMS அனுப்புக
10 ரஹ்மான் - நிகிதா இறுதிச்சுற்று MM4<Space>RN
56767778 எண்ணுக்கு SMS அனுப்புக

நடனச் சுற்றுகள்

[தொகு]
தேதி சுற்று சிறந்த நடனம் வெளியேற்றப்பட்ட இணை/குழு
25 அக்டோபர் 2009
01 நவம்பர் 2009 ஆதவன் திருவிழா சிறப்பு
08 நவம்பர் 2009 சிறைச்சாலை ஆண் : கிரண்
பெண் : பூஜா
இயக்குனர்: -
15 நவம்பர் 2009 குழந்தைகள் தினம் சிறப்பு ஆண் : ரஹ்மான்
பெண் : சௌந்தர்யா
இயக்குனர்: -
கிரண் - பூஜா
22 நவம்பர் 2009 மசாலா மிக்ஸ் ஆண் 1 : லோகேஷ்
ஆண் 2 : நிவாஸ்
29 நவம்பர் 2009
17 சனவரி 2010 பொங்கல் சிறப்பு - அரையிறுதி முடிவுகள் அறிவிப்பு
24 சனவரி 2010 அரையிறுதி முடிவுகள் அறிவிப்பு
31 சனவரி 2010 இறுதிச்சுற்று
06 பிப்ரவரி 2010 வெற்றி விழா - நேரு உள் விளையாட்டு அரங்கம்
  • சிங்கிள் ஜென்டர் எனப்படும் ஓரே பாலினத்தார் சுற்றின் போது நிவாஸ் - கிருத்திகா இணைக்காக சந்தோஷ் (எ) சேண்டி குழுவினர் இசையமைத்த புதிய மனாட மயிலாட தலைப்புப் பாடல் சிறப்பான வரவேற்பைப் பெற்றது.
  • 01 நவம்பர் 2009 அன்று ஆதவன் திருவிழா சிறப்பு சுற்றுக்கு ஆதவன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் கதாநாயகன் சூர்யா அகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.
  • குழந்தைகள் தினச் சிறப்பு நிகழ்ச்சியில், ரஹ்மான் பச்சை முகமூடி மனிதன் வேடத்திலும், சௌந்தர்யா பொம்மை வேடத்திலும் ஆடி

சிறந்த நடனத்திற்கான பரிசைப் பெற்றனர்

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மானாட_மயிலாட&oldid=4101860" இலிருந்து மீள்விக்கப்பட்டது