உள்ளடக்கத்துக்குச் செல்

மாங்கனீசு ஊதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாங்கனீசு ஊதா
பெயர்கள்
வேறு பெயர்கள்
அமோனியம் மாங்கனீசு(III) பைரோபாசுபேட்டு
இனங்காட்டிகள்
10101-66-3
பண்புகள்
NH4MnP2O7
வாய்ப்பாட்டு எடை 246.885
தோற்றம் ஊதா நிற திண்மம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மாங்கனீசு ஊதா (Manganese violet) என்பது NH4MnP2O7 என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட கனிம வேதியியல் சேர்மம் ஆகும். இதை அமோனியம் மாங்கனீசு(III) பைரோபாசுபேட்டு என்று அழைக்கிறார்கள். பைரோபாசுபேட்டு (P2O4−7), அமோனியம் (NH+4), மற்றும் மாங்கனீசு ஆகியவை சேர்ந்து அமோனியம் மாங்கனீசு(III) பைரோபாசுபேட்டு திண்மத்தை உருவாக்குகின்றன. மாங்கனீசு(III) ஆக்சைடு, டை அமோனியம் பாசுபேட்டு, பாசுபாரிக் அமிலம் ஆகியவை சேர்ந்த கலவையை சூடுபடுத்துவதன் மூலம் மாங்கனீசு ஊதா தயாரிக்கப்படுகிறது. இது பரவலாக அறியப்பட்ட ஒரு நிறமியாகும் [1].

வேதிக்கட்டமைப்பு

[தொகு]

α- மற்றும் β-வடிவம் என்ற இரண்டு பல்லுருவ தோற்றங்களில் இது அறியப்படுகிறது. ஆனால் இரண்டு வடிவங்களிலும் கட்டமைப்பு ஒரே மாதிரியாகவே உள்ளது. Mn(III) மையங்கள் உருக்குலைந்த எண்முக தளங்களில் பைரோபாசுபேட்டு ஈந்தணைவிகள் வழங்கும் ஆறு ஆக்சிசன் அணுக்களால் சூழப்பட்டுள்ளன [2].

நிறமாலை

[தொகு]

பிரதிபலிப்பு மற்றும் ஒளிர்வு நிறமாலைகளை அகச்சிவப்பு நிறமாலையில் காணலாம் [3].

மேற்கோள்கள்

[தொகு]
  1. Hugo Müller, Wolfgang Müller, Manfred Wehner, Heike Liewald "Artists' Colors" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2002, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a03_143.pub2
  2. Yasmin Begum, Adrian J. Wright "Relating highly distorted Jahn–Teller MnO6 to colouration in manganese violet pigments" J. Mater. Chem., 2012, vol. 22, pp. 21110–21116. எஆசு:10.1039/c2jm33731b
  3. Manganese violet, at ColourLex
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாங்கனீசு_ஊதா&oldid=3376327" இலிருந்து மீள்விக்கப்பட்டது