உள்ளடக்கத்துக்குச் செல்

மருந்தாளுநர் கல்லூரிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உடல்நலத்திற்கு உதவும் விதமாக பல மருந்துப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த மருந்துப் பொருட்கள் குறித்த தகவல்களை மருத்துவர்களுக்கும், அவர்கள் வழியாக பயன்பாட்டாளர்களுக்கும் கொண்டு செல்ல உதவும் மருந்தாளுநர்களுக்கான இளநிலை, முதுநிலை மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டங்களுக்கான கல்வியை அளிக்கும் கல்லூரிகள் மருந்தாளுநர் கல்லூரிகள் என அழைக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டிலுள்ள மருந்தாளுநர் கல்லூரிகள்

[தொகு]

தமிழ்நாட்டில் மருந்தாளுநர் கல்விக்கான இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்புகளுக்கான கல்லூரிகள் அரசுக் கல்லூரிகள், சுயநிதிக் கல்லூரிகள் என இரு வகையாக உள்ளன. இவை அனைத்தும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

அரசுக் கல்லூரிகள்

[தொகு]
  1. மருந்தாளுநர் கல்லூரி, மதுரை மருத்துவக் கல்லூரி, மதுரை.
  2. மருந்தாளுநர் கல்லூரி, சென்னை மருத்துவக் கல்லூரி, சென்னை.

சுயநிதிக் கல்லூரிகள்

[தொகு]

தமிழ்நாட்டில் மருந்தாளுநர் கல்விக்கான 41 சுயநிதிக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.