மரியா லிகோரியோ
மரியா லிகோரியோ (Maria Ligorio) (பிறப்பு 1970 சூன் 25 சான் மைக்கேல் சாலண்டினோ) இவர் ஓர் கண்பார்வையற்ற, இத்தாலியைச் சேர்ந்த பாராலிம்பிக் விளையாட்டில் கண்பார்வையற்ற வீரராவார். [1] இவர், 1996 கோடைகால பாராலிம்பிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கத்தையும், 2000 கோடைகால பாராலிம்பிக் போட்டிகளில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளார். [2] [3]
சுயசரிதை
[தொகு]மரியா லிகோரியோ 1970 இல் பிறந்தார். தனது ஒரு வயதில் தனது பார்வையை முற்றிலுமாக இழந்தார். விரைவோட்டத்தில் மதிப்புமிக்க ஓட்டப்பந்தய வீரராக மாறிய இவர், 1989 ஆம் ஆண்டில் ரோமில் வேலைக்காக சென்றததைத் தொடர்ந்து போட்டியிடத் தொடங்கினார். ஒரு தசாப்தத்தில் இவர் கோடைகால பாராலிம்பிக் விளையாட்டு, மூன்று உலகப் போட்டியிலும், நான்கு ஐரோப்பிய போட்டியிலும், 100, 200, 400 மீ பிளாட் சிறப்புகளிலும், 4 × 100 மீ ரிலேவிலும் பங்கேற்றார்.
2000 ஆம் ஆண்டில் சிட்னி பாராலிம்பிக்கில் பங்கேற்ற பிறகு, தனிப்பட்ட காரணங்களுக்காக, இவர் சர்வதேச போட்டியை விட்டு வெளியேறினார். இருப்பினும், இவர் 2012 இல் இத்தாலியப் போட்டியில் பங்கேற்றார், லண்டன் விளையாட்டுப் போட்டிகளில் இவர் நுழைந்த சந்தர்ப்பத்தில், 100 மற்றும் 200 மீ ஓட்டத்தில் (முழுமையான கண்பார்வையற்றவருக்கானப் பிரிவு) சிறந்த வெற்றியைப் பெற்றார்.
குறிப்புகள்
[தொகு]- ↑ "Maria Ligorio". www.asdroma2000.org. Archived from the original on 2020-06-06. பார்க்கப்பட்ட நாள் 2020-08-25.
- ↑ "Maria Ligorio - Athletics | Paralympic Athlete Profile". International Paralympic Committee (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-25.
- ↑ "Scheda persona". www.coni.it. பார்க்கப்பட்ட நாள் 2020-08-25.