மன்னாப் பொருள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மன்னாப் பொருள் என்பது ஓர் இலக்கணக் குறியீடு. தொல்காப்பியம் இதனைக் குறிப்பிடுகிறது.

மன்னாப் பொருளும் அன்ன இயற்றே [1]

சினைமுதல் கிளவி செயலாற்றும் பாங்கைக் குறிப்பிடும்போது 'உம்' சேர்த்துச் சொல்ல வேண்டும் [2] என்று கூறிய அடுத்த நூற்பா இவ்வாறு குறிப்பிடுகிறது. மன்னாப் பொருள் என்பது உலகில் இல்லாத பொருள். [3] ஒருவரிடம் இல்லாத பொருள் மற்றொருவரிடம் இருக்கலாம். இது மன்னாப் பொருள் ஆகாது. உலகில் இல்லாத பொருளை குறிப்பிட நேரும்போது 'உம்' சேர்த்துச் சொல்லவேண்டும் என்கிறார் தொல்காப்பியர்.

பவளக் கோட்டு நீல யானை சாதவாகனன் கோயிலுள்ளும் இல்லை. [4]

இப்படிச் சொல்லவேண்டும் என்பது தமிழ்நெறி.

அடிக்குறிப்பு[தொகு]

  1. தொல்காப்பியம் 2-35
  2. நம்பி கண் இரண்டும் நொந்தான்
    நங்கை முலை இரண்டும் பெருகினாள்
  3. இந்த நூற்பாவுக்கு இளம்பூரணர் தந்துள்ள உரை மேற்கோள்.
  4. இளம்பூரணர் உரை மேற்கோள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்னாப்_பொருள்&oldid=1560188" இலிருந்து மீள்விக்கப்பட்டது