உள்ளடக்கத்துக்குச் செல்

மது ஜெயின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மது ஜெயின்
2018 இல் நாரி சக்தி விருது பெறும் மது ஜெயின்8
தேசியம் இந்தியா
பணிவடிவமைப்பாளர்
அறியப்படுவதுமூங்கில் ஆடையின் பிரதிநிதி மற்றும் பெண்களுக்கு அதிகாரம் அள்ப்பவர்

மது ஜெயின் ( Madhu Jain ) ஓர் இந்திய ஆடை வடிவமைப்பாளர் ஆவார். "எதிர்காலத்தின் ஜவுளி" என்று இவர் கருதும் மூங்கில் துணிக்கான பிரதிநிதியாக இருக்கிறார். இத்துறையில் முப்பது ஆண்டுகள் பணியாற்றிய இவருக்கு 2018 ஆம் ஆண்டில் நாரி சக்தி விருது வழங்கப்பட்டது.

வாழ்க்கை

[தொகு]

மது ஜெயின் புது தில்லியில் ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தார். வெல்ஹாம் பெண்கள் பள்ளி மற்றும் வேவர்லி கான்வென்ட் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றார்.பின்னர், தில்லியின் பொருளாதாரப்பள்ளியில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[1][2] 1987 இல் ஆடை வடிவமைப்புத் துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.[3]

2003 இல் நடிகர் மிலிந்த் சோமனுடன் இணைந்து "புராஜெக்ட் எம்" என்ற பொருளுக்கு வழிவகுத்தார்.[2]

2010 பொதுநலவாய விளையாட்டுக்களில் பங்கேற்க 2010 அக்டோபரில் 4,000க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் புதுதில்லி வந்தனர். அவர்களுக்கன ஆடைகளை தயாரிக்கும் பணியை மேற்கொண்டார். திறப்பு விழாவில் இவரது ஆடை வடிவமைப்பு அனைவராலும் கவனிக்கப்பட்டது.[2]

இகாட் மற்றும் இரட்டை இகாட் என்ற சாயமிடும் தொழிநுட்பத்தின் (இது துணிகளை சாயமிடுவதற்கும் நெசவு செய்வதற்கும் முன் நூல்களில் சாயமிடுவதைத் தடுக்கும் ஜவுளிகளை வடிவமைக்கப் பயன்படுகிறது) முப்பதாவது ஆண்டினை 2017 இல் மது ஜெயின் விமர்சையாக கொண்டாடினார்.[3]

அங்கீகாரம்

[தொகு]

ஆடை வடிவமைப்பில் குறிப்பிடத்தக்க சாதனைகளை புரிந்தமைக்காகவும் அதன் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளித்ததற்காகவும்[4] 2018 ஆம் ஆண்டு அனைத்துலக பெண்கள் நாள் அன்று இவருக்கு நாரி சக்தி விருது[5] for her work with textiles[6] வழங்கப்பட்டது. புது தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் இல்லத்தில் அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா சஞ்சய் காந்தி ஆகியோர் முன்னிலையில் இந்த விருதைப் பெற்றுக் கொண்டார். இவருடன் சேர்ந்து அன்றைய தினம் சுமார் 30 பேர் மற்றும் ஒன்பது நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டு, விருதையும் ரூபாய் 100,000 பரிசையும் பெற்றன.[7][4]

2019 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இவர் ஜவுளி அமைச்சகத்தால் இவரது தலைமைக்காக அங்கீகரிக்கப்பட்டார். ஜவுளித்துறையில் அவர்களின் பங்களிப்பை பாராட்டி ஏழு பேருக்கு சிறப்பு விருதை துறை உருவாக்கியது.[6] மூங்கில் உற்பத்தியில் இந்தியா இரண்டாவது பெரிய நாடாக உள்ளது என்பதாலும் அதன் நார் அழியக்கூடியது, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காது மேலும் நச்சுத்தன்மையற்றது என்ற பல காரணங்களுக்காக மூங்கில் நார் உபயோகத்தை ஆதரிப்பதாக விளக்கினார். . இவர் மூங்கில் இழையை "எதிர்காலத்தின் ஜவுளி" என்று பார்க்கிறார்.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Bhardwaj, Karan (3 August 2013). "Roots of revival". The Pioneer. https://www.dailypioneer.com/2013/vivacity/roots-of-revival.html. 
  2. 2.0 2.1 2.2 "Madhu Jain". Fashionfad (in அமெரிக்க ஆங்கிலம்). 2011-11-02. பார்க்கப்பட்ட நாள் 2021-01-16.
  3. 3.0 3.1 "Madhu Jain celebrates 30 years in fashion industry at AIFW 2017". The Indian Express (in ஆங்கிலம்). 2017-03-16. பார்க்கப்பட்ட நாள் 2021-01-16.
  4. 4.0 4.1 Engl, India New; News (2018-03-09). "Designer Madhu Jain honoured by President for empowering women". INDIA New England News (in ஆங்கிலம்). Archived from the original on 2021-01-22. பார்க்கப்பட்ட நாள் 2021-01-16. {{cite web}}: |last2= has generic name (help)
  5. "Nari Shakti Puraskar - Gallery". narishaktipuraskar.wcd.gov.in. Archived from the original on 2021-01-14. பார்க்கப்பட்ட நாள் 2021-01-16.
  6. 6.0 6.1 6.2 "Madhu Jain Honoured by Ministry of Textiles' Award for Special Recognition in Textile Sector - Times of India" (in en). 6 January 2019. https://timesofindia.indiatimes.com/life-style/fashion/designers/madhu-jain-honoured-by-ministry-of-textiles-award-for-special-recognition-in-textile-sector/articleshow/67395430.cms. 
  7. "On International Women's Day, the President conferred the prestigious Nari Shakti Puraskars to 30 eminent women and 9 distinguished Institutions for the year 2017". pib.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2021-01-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மது_ஜெயின்&oldid=4108282" இலிருந்து மீள்விக்கப்பட்டது