ம. பெ. சீனிவாசன்
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
ம.பெ.சீனிவாசன் | |
---|---|
பிறப்பு | ஆகத்து 16, 1943 சேந்திஉடையநாதபுரம், தமிழ்நாடு |
இருப்பிடம் | மதுரை |
கல்வி | முனைவர் தமிழ் |
பணி | பேராசிரியர் |
பணியகம் | மன்னர் துரை சிங்கம் அரசுக்கல்லூரி சிவகங்கை |
மபெசீ என்று பரவலாக அறியப்பெறும் பேராசிரியர் ம. பெ. சீனிவாசன் (பிறப்பு: 16 ஆகத்து 1943) தமிழறிஞரும் முன்னாள் தமிழ்ப் பேராசிரியரும் ஆவார்.
சிவகங்கையை அடுத்துள்ள சேந்திஉடையநாதபுரம் என்னும் சிற்றூரிற் (1943) பிறந்தவர்.[1] பெற்றோர் ம.பெரியசாமி – சிட்டாள். பொருளியல் பட்டப்படிப்புக்குப் பின்னர், பட்டமேற்படிப்பில் மதுரைத்தியாகராசர் கல்லூரியில் தமிழ்பயின்று, கல்லூரி ஆசிரியராக 34 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.
தமிழ்ப் பணியும் விருதுகளும்
[தொகு]ஆழ்வார்களின் அருளிச் செயல்களையும் வியாக்கியானம் எனப்பெறும் பேருரைகளையும் விரும்பிக்கற்றவர். அத்துறையில் 'முனைவர்' பட்டம் பெற்றிருப்பதோடு, பல நூல்களையும் எழுதியிருக்கிறார். திறனாய்வு, ஒப்பீடு, தனிவரைவு (Monograph), வாழ்க்கை வரலாற்று இலக்கியம் , உரைவிளக்கம், தொகுப்பு (Compilation), பதிப்பு என பல வகைப்பாடுகளில் அமைந்த நூல்கள்
2012 சேக்கிழார் ஆராய்ச்சி மையம் வழங்கிய விருது, சென்னை. |நூல்: கம்பனும் ஆழ்வார்களும்|
2015 வள்ளல் சடையப்ப விருது, மதுரை கம்பன் கழகம் மதுரை. |நூல்: கம்பனும் ஆழ்வார்களும்|
2011 டாக்டர் மு வ இலக்கிய நினைவு பரிசு, கவிதை உறவு அமைப்பு சென்னை. |நூல்: ஆழ்வார்களும் தமிழ் மரபும்|
நூல்கள்
[தொகு]வ.எண் | நூல்கள் | வெளியீட்டாளர் | பதிப்பு ஆண்டு |
---|---|---|---|
1 | திருமங்கையாழ்வார் மடல்கள் | அன்னம் சிவகங்கை | 1987 |
திருமங்கையாழ்வார் மடல்கள் (மறுபதிப்பு)) | மணிவாசகர் பதிப்பகம் சிதம்பரம் | 2002 | |
2 | வைணவ இலக்கிய வகைகள் | தேவகி பதிப்பகம் சிவகங்கை | 1994 |
திவ்வியப்பிரபந்த இலக்கிய வகைகள் (மேலதன் மறுபதிப்பு) | மெய்யப்பன்தமிழாய்வகம் சிதம்பரம் | 2001 | |
3 | பெரியாழ்வார் (இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை) | சாகித்திய அகாதமி புதுதில்லி | 1996, 2006, 2011 |
4 | குலசேகராழ்வார் | சாகித்திய அகாதமி புதுதில்லி | 2003, 2015 |
5 | Kulasekara Alwar (in English under MIL Series) | சாகித்திய அகாதமி புதுதில்லி | 2009 |
6 | Periyalwar in English | சாகித்திய அகாதமி புதுதில்லி | 2014 |
7 | முதலாழ்வார்கள்]] | சாகித்திய அகாதமி புதுதில்லி | 2007, 2011 |
8 | திவ்வியப்பிரபந்தம் (பாசுரத்தொகுப்பு) ஆராய்ச்சி முன்னுரையுடன் | அன்னம் சிவகங்கை | 2010 |
9 | ஒரு நாள் ஒரு பாசுரம் | மணிவாசகர் பதிப்பகம் சென்னை | 2003,2006 |
10 | ஸ்ரீ இராமாநுசர் (ஞானபரம்பரை வரிசை) | அருட்செல்வர் நா.மகாலிங்கம் வெளியீடு (வி-உ) வர்த்தமானன் பதிப்பகம், சென்னை | 2006, 2009, 2014 |
11 | திருமுருகாற்றுப்படை உரை விளக்கம் | மீனாட்சி புத்தக நிலையம், மதுரை | 2009 |
12 | ஆழ்வார்களும் தமிழ் மரபும் | மெய்யப்பன் பதிப்பகம் சிதம்பரம் | 2010 |
13 | கம்பனும் ஆழ்வார்களும் | மீனாட்சி புத்தக நிலையம், மதுரை | 2011 |
14 | கம்பனில் சங்க இலக்கியம் | மீனாட்சி புத்தக நிலையம், மதுரை | 2013 |
15 | வண்டாடப் பூமலர | கவிதா பப்ளிகேஷன், சென்னை | 2013 |
மேற்கோள்கள்
[தொகு]நூல்களை தேடுங்கள் [[1]]
சீனிவாசன், ம.பெ புத்தகங்களுக்குத் தமிழியலில் வெளியான மதிப்புரைகள்] [[தொடர்பிழந்த இணைப்பு]]
ஆசிரியர் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி [[2]]
OPAC Online Public Access Catalogue [[தொடர்பிழந்த இணைப்பு]]
Dinamalar [[3]]