போரோல்
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
1H-போரோல்
| |||
இனங்காட்டிகள் | |||
287-87-6 | |||
ChemSpider | 10709008 | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 101923629 | ||
| |||
பண்புகள் | |||
C4H5B | |||
வாய்ப்பாட்டு எடை | 63.89 g·mol−1 | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
போரோல் (Borole) என்பது கருத்தியல் நிலையிலுள்ள ஒரு பல்லின வளையக் கரிமச் சேர்மம் ஆகும். ஐந்து உறுப்பினர்களைப் பெற்று C4H4BH என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் இச்சேர்மம் விவரிக்கப்படுகிறது.பதிலீடு செய்யப்படாத சேர்மம் எதுவும் தனிமைப்படுத்தப்படவில்லை. தனித்துப் பிரிக்கப்பட்ட பதிலீடு செய்யப்பட்ட வழிப்பெறுதிகள் போரோல்கள் எனப்படுகின்றன. போரோல்களை மெட்டலோல்கள் எனப்படும் சைக்ளோபென்டாடையீன் வழிப்பெறுதிகளாக வகைப்படுத்துகிறார்கள். இதனடிப்படையில் நோக்கினால் இவை பிரோல்களில் உள்ள நைட்ரசன் அணுக்களை போரான் அணுக்கள் இடப்பெயர்ச்சி செய்துள்ள பிரோல்களின் கட்டமைப்பை ஒத்த சேர்மங்களாகக் கருதப்படுகின்றன. எனினும் அக்கெல்சு விதியை போரோலுக்கு பொருத்திக் காணவியலாது. அரோமாட்டிக் பண்புக்கு எதிரான சேர்மமாக இது கருதப்படுகிறது [1].
வினைகள்
[தொகு]பென்டாபினைல்போரோல் என்ற முதலாவது போரோலை தனித்துப் பிரிக்க இயலும். 1,1-டைமெத்தில்-2,3,4,5-டெட்ராபீனைல்சிடானோலுடன் பீனைல்போரான் டைகுளோரைடு சேர்த்து வினைபுரியச் செய்வதால் இதை தயாரிக்க இயலும். பெரொசீன் வகைச் சேர்மங்களைத் தயாரிக்க போரோல்களைப் பயன்படுத்தலாம் [2] Boroles can be used to form ferrocene-like sandwich compounds.[3] .
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Alan R. Katritzky, ed. (1993), Advances in Heterocyclic Chemistry, vol. 56, Academic Press, p. 375, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-020756-5, பார்க்கப்பட்ட நாள் 2010-03-13
- ↑ Francis Gordon Albert Stone, Robert West, ed. (1996), Advances in Heterocyclic Chemistry, vol. 39, Academic Press, p. 380, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-031139-2, பார்க்கப்பட்ட நாள் 2010-03-13
- ↑ Alan R. Katritzky, ed. (2001), Advances in Heterocyclic Chemistry, vol. 79, Academic Press, pp. 169–170, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-020779-4, பார்க்கப்பட்ட நாள் 2010-03-13