உள்ளடக்கத்துக்குச் செல்

பைராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி (பினாங்கு)

ஆள்கூறுகள்: 05°10′51″N 100°26′30″E / 5.18083°N 100.44167°E / 5.18083; 100.44167
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பைராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி
பைராம் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் தோற்றம் (2014)
அமைவிடம்
பைராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி is located in மலேசியா மேற்கு
பைராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி
பைராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி
நிபோங் திபால், பினாங்கு, மலேசியா
அமைவிடம்05°10′51″N 100°26′30″E / 5.18083°N 100.44167°E / 5.18083; 100.44167
தகவல்
வகைஆண்/பெண் இரு பாலர் பள்ளி
குறிக்கோள்அறிவே எல்லாம்
தொடக்கம்1905
நிறுவனர்நாகேசுவரன்
பள்ளி மாவட்டம்மத்திய செபராங் பிறை
கல்வி ஆணையம்மலேசியக் கல்வி அமைச்சின் பகுதி உதவி
பள்ளி இலக்கம்PBD4023
தரங்கள்1 முதல் 6 வகுப்பு வரை
மாணவர்கள்33
7 ஆசிரியர்கள்
கல்வி முறைமலேசியக் கல்வித்திட்டம்
இணையம்
2015-பினாங்கு மாநில தமிழ்ப்பள்ளிகளுக்கான திடல் தடப் போட்டியில் 200மீ 100மீ நம்பிகை நட்சத்திரம் வெற்றி மாணவி அனிசா

பைராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி என்பது (மலாய்: (SJKT Ladang Byram); ஆங்கிலம்: (Ladang Byram Tamil School); சீனம்: 拉当拜拉姆) மலேசியா, பினாங்கு மாநிலத்தில், நிபோங் திபால் நகர்ப்புறத்தில் அமைந்து உள்ள ஒரு தமிழ்ப்பள்ளி. இங்கு 7 வயது முதல் 12 வயதுக்கு உட்பட்ட தமிழ் மாணவர்கள் பயில்கிறார்கள். மலேசிய அரசாங்கத்தால் நிலைசார் உதவிபெறும் தமிழ்ப்பள்ளியாக உள்ளது.[1][2]

வரலாறு

[தொகு]

இப்பள்ளி 1905-ஆம் ஆண்டு மலாயாவில் பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்டது. பைராம் தோட்டத்தில் பணியாற்றிய தமிழர்களின் பிள்ளைகள் நலன் கருதி, அப்போது இருந்த தோட்ட உரிமையாளர்; அவருடைய இணை உரிமையாளர் பிரான்சிஸ் எட்வர்ட் மகுரே என்பவர்கள் பைராம் தோட்டத் தமிழ்ப்பள்ளியை அமைத்தனர்.

தொடக்கக் காலத்தில் இப்பள்ளிக்கூடம் வெறுமையாக இருந்த தோட்டப் பணியாளர்கள் மாளிகையில் செயல்பட்டது. 1959-ஆம் ஆண்டு பைராம் தோட்ட நிலங்கள் பல பகுதிகள் தோட்ட உரிமையாளர்களால் விற்கும் சூழல் ஏற்பட்டதால் பள்ளி நிலமும் சுற்றியுள்ள நிலமும் மோ லியோங் உங் என்ற சீன வணிகரால் வாங்கப்பட்டது.

அரசாங்கம் வழங்கிய நிதியுதவி

[தொகு]

அதன் பின்னர் சுமார் 3 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தை மீண்டும் பள்ளிக்காகச் சீன வணிகர் மோ லியோங் உங் இலவசமாக வழங்கினார்.

1992-ஆம் ஆண்டு, முன்பு இருந்த அந்தப் பழைமையான தோட்ட பணியாளர் மாளிகை உடைக்கப் பட்டது. அதே நிலத்தில் அரசாங்கம் வழங்கிய நிதியுதவியால் இரண்டு கட்டடங்கள் புதிதாகக் கட்டப்பட்டன.

1850-களில் நிபோங் திபால் பகுதிகளில் நிறைய ரப்பர் தோட்டங்கள் இருந்தன. வால்டோர் தோட்டம், சுங்கை பாக்காப் தோட்டம், கலிடோனியா தோட்டம், பைராம் தோட்டம், விக்டோரியா தோட்டம், டிரான்ஸ் கிரியான் தோட்டம், சங்காட் தோட்டம், ஜாவி தோட்டம், சிம்பா தோட்டம், கிரியான் தோட்டம் போன்ற தோட்டங்கள்.

1880-ஆம் ஆண்டில் பைராம் கரும்புத் தோட்டம்

[தொகு]

19-ஆம் நூற்றாண்டில் பைராம் தோட்டம் ஒரு கரும்புத் தோட்டமாக இருந்தது. 1880-ஆம் ஆண்டுகளில் உலகளாவிய நிலையில் சீனியின் விலை வீழ்ச்சி அடைந்தது. அதனால் இந்தத் தோட்டத்தில் ரப்பர் பயிர் செய்யப் பட்டது.

1960-களில் ரப்பர் விலையும் வீழ்ச்சி அடைந்தது. அதன் பின்னர் செம்பனை பயிருக்கு மாற்றம் கண்டது. முன்பு விக்டோரியா தோட்டம் என்று அழைக்கப்பட்ட இந்தத் தோட்டம் தான் இப்போது பைராம் தோட்டம் என்று அழைக்கப் படுகிறது.[3]

ஐந்து தமிழ்ப் பள்ளிகளுக்கு பயிற்சிப் புத்தகங்கள்

[தொகு]

தமிழ்ப்பள்ளி மாணவர்களும் கல்விக் கேள்விகளில் சிறந்து விளங்க வேண்டும். அந்த வகையில் ஜாவி சட்டமன்ற உறுப்பினர் ஜெசன் எங் மொய் லாய், 2019-ஆம் ஆண்டில் ஐந்து தமிழ்ப் பள்ளிகளுக்குப் பயிற்சிப் புத்தகங்கள் வழங்கிச் சிறப்பு செய்து இருக்கிறார். ஏறக்குறைய 610 பயிற்சி புத்தகங்கள் வழங்கப்பட்டன.[4]

நிபோங் திபால் பகுதியில் இருக்கும் தமிழ்ப்பள்ளிகள்:

  • சங்காட் தோட்டத் தமிழ்ப்பள்ளி
  • பைராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி
  • ஜாவி தோட்டத் தமிழ்ப்பள்ளி
  • கிரியான் தோட்டத் தமிழ்ப்பள்ளி
  • நிபோங் திபால் தமிழ்ப்பள்ளி

சாதனை

[தொகு]

பினாங்கு மாநிலத்தில் முதல் முறையாக அரசாங்க யூ.பி.எஸ்.ஆர். தேர்வில் 7எ(A) பெற்ற மாணவர் பைராம் தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்தவர் என்பது வரலாற்றுக் குறிப்பு.

இப்பள்ளி மாணவர்கள் 2012, 2013, 2014, 2015-ஆம் ஆண்டுகளில் மாநில அளவில் நடைபெற்ற திடல் தடப் போட்டிகளில் பங்கு பெற்று பல முறை தங்கம், வெள்ளி பதக்கங்களைப் பெற்றுள்ளனர்.

மேற்கோள்கள்

[தொகு]