பேக்கர்–வெங்கடராமன் மறுசீராக்கல் வினை
பேக்கர்–வெங்கடராமன் மறுசீராக்கல் (Baker–Venkataraman rearrangement) என்பது 2-அசிட்டாக்சிஅசிட்டோ பீனோன்கள் காரத்துடன் சேர்ந்து 1,3 இருகீட்டோன்களாக மாறும் ஒரு வேதிவினையாகும்[1][2]
இந்த மறுசீரமைப்பு வினை ஈனோலேட் உருவாக்கத்தைத் தொடர்ந்து நிகழ்கின்ற அசைல் மாற்றத்தின் வழியாக நடக்கிறது. இதனைக் கண்டறிந்த வில்சன் பேக்கர், கிருட்டிணசாமி வெங்கடராமன் ஆகியோரின் பெயராலேயே இவ்வினை அழைக்கப்படுகிறது.
பேக்கர்–வெங்கடராமன் மறுசீரமைத்தல் பெரும்பாலும் ஃபிளாவோன்கள் மற்றும் குரோமோன்களைத் தொகுத்துப் பெற பயன்படுகிறது[3][4][5][6][7][8][9][10]
வினை வழிமுறை
[தொகு]அரோமாட்டிக் கீட்டோனுக்கான ஆல்பா ஐதரசன் அணுவைப் பிரித்தெடுத்து ஈனொலேட்டாக மாற்றும் நடவடிக்கையை வினையில் சேர்க்கப்பட்டுள்ள காரம் மேற்கொள்கிறது. பின்னர் இந்த ஈனோலேட்டு எசுத்தர் கார்பனைலைத் தாக்கி வட்ட ஆல்காக்சைடை உருவாக்குகிறது. இதைத் தொடர்ந்து இந்த இடைநிலை வட்ட ஆல்காக்சைடு நிலைப்புத் தன்மை கொண்ட திறந்த அமைப்பு ஃபீனோலேட்டாக மாற்றமடைகிறது. இறுதியாக ஃபீனோலேட்டு புரோட்டானேற்றமடைந்து தேவையான 1,3 இருகீட்டோனைக் கொடுக்கிறது.
இவற்றையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Baker, W. (1933). "Molecular rearrangement of some o-acyloxyacetophenones and the mechanism of the production of 3-acylchromones". J. Chem. Soc.: 1381–1389. doi:10.1039/JR9330001381.
- ↑ Mahal, H. S.; Venkataraman, K. (1934). "Synthetical experiments in the chromone. group. XIV. Action of sodamide on 1-acyloxy-2-acetonaphthones". J. Chem. Soc.: 1767–1769. doi:10.1039/JR9340001767.
- ↑ Wheeler, T. S. (1952). "Flavone". Organic Syntheses 32: 72. http://www.orgsyn.org/orgsyn/prep.asp?prep=cv4p0478. (also in the Collective Volume (1963) 4: 478 (PDF)).
- ↑ Jain, P. K.; Makrandi, J. K.; and others (1982). "A Facile Baker-Venkataraman Synthesis of Flavones using Phase Transfer Catalysis". Synthesis 1982 (3): 221–222. doi:10.1055/s-1982-29755. https://archive.org/details/sim_synthesis_1982-03_3/page/221.
- ↑ Kalinin, A. V.; Da Silva, A. J. M.; Lopes, C. C.; Lopes, R. S. C.; Snieckus, V. (1998). "Directed ortho metalation – cross coupling links. Carbamoyl rendition of the Baker-Venkataraman rearrangement. Regiospecific route to substituted 4-hydroxycoumarins". Tetrahedron Letters 39 (28): 4995–4998. doi:10.1016/S0040-4039(98)00977-0.
- ↑ Kraus, G. A.; Fulton, B. S. Wood, S.H. (1984). "Aliphatic acyl transfer in the Baker-Venkataraman reaction". J. Org. Chem. 49 (17): 3212. doi:10.1021/jo00191a033.
- ↑ Reddy, B.P.; Krupadanam, G.L.D. (1996). "The synthesis of 8-allyl-2-styrylchromones by the modified baker-venkataraman transformation". J. Heterocycl. Chem. 33 (6): 1561. doi:10.1002/jhet.5570330602.
- ↑ Kalinin, A.V.; Sneckus, V. (1998). "4,6-Dimethoxy-3,7-dimethylcoumarin from Colchicum decaisnei. Total synthesis by carbamoyl Baker-Venkataraman rearrangement and structural revision to isoeugenetin methyl ether". Tetrahedron Lett. 39 (28): 4999. doi:10.1016/S0040-4039(98)00978-2.
- ↑ Thasana, N.; Ruchirawat, S. (2002). "The application of the Baker–Venkataraman rearrangement to the synthesis of benz[bindeno[2,1-e]pyran-10,11-dione"]. Tetrahedron Lett. 43 (25): 4515. doi:10.1016/S0040-4039(02)00818-3. https://archive.org/details/sim_tetrahedron-letters_2002-06-17_43_25/page/4515.
- ↑ Santos, C.M.M.; Silva, A.M.S. and Cavaleiro, J.A.S. (2003). "Synthesis of New Hydroxy-2-styrylchromones". Eur. J. Org. Chem. 2003 (23): 4575. doi:10.1002/ejoc.200300468.