பெர்த்தியரைட்டு
Appearance
பெர்த்தியரைட்டு Berthierite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | கனிமம் |
வேதி வாய்பாடு | FeSb2S4 |
இனங்காணல் | |
நிறம் | எஃகு சாம்பல் |
படிக அமைப்பு | செஞ்சாய்சதுரம் |
பிளப்பு | குறைவு/தெளிவற்றது |
மோவின் அளவுகோல் வலிமை | 2-3 |
மிளிர்வு | உலோகத்தன்மை |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகாது |
ஒப்படர்த்தி | 4.64 |
பெர்த்தியரைட்டு (Berthierite) என்பது FeSb2S4. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். இரும்பு மற்றும் ஆண்டிமனி தனிமங்களின் சல்பைடு கனிமம் என்று இது வகைப்படுத்தப்படுகிறது. பன்னிற ஒளிர்வு மங்கிய உலோகப் பளபளப்பும் எஃகுச் சாம்பல் நிறமும் கொண்ட கனிமமாக இது காணப்படுகிறது. இத்தகைய தோற்றத்தைக் கொண்டு சிலசமயங்களில் இதை தவறுதலாக சிடிப்னைட்டு கனிமம் என்று கருதப்பட்டுவிடுவதுண்டு. 1827 ஆம் ஆண்டு பிரான்சு நாட்டு வேதியியலாளர் பியர் பெர்த்தியர் கண்டுபிடித்த காரணத்தால் இக்கனிமத்திற்கு பெர்த்தியரைட்டு எனப் பெயர் சூட்டப்பட்டது.
பன்னாட்டு கனிமவியல் சங்கம் பெர்த்தியரைட்டு கனிமத்தை Btr[1] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.