உள்ளடக்கத்துக்குச் செல்

பூமி திரிவேதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூமி திரிவேதி
பிறப்பு23 ஆகத்து 1988 (1988-08-23) (அகவை 36)
வடோதரா, குசராத்து, இந்தியா
இசை வடிவங்கள்திரைப்பட இசை
மின்னணு இசை
பாப் இசை
ராக் இசை
தொழில்(கள்)பாடகர்
இசைக்கருவி(கள்)குரலிசை
இசைத்துறையில்2012–தற்போது வரை

பூமி திரிவேதி ( Bhoomi Trivedi ) ஒரு இந்தியப் பாடகி ஆவார் கோலியோன் கி ராஸ்லீலா: ராம்-லீலா ( 2013), மற்றும் ஹுஸ்ன் பார்ச்சம் ( 2018) போன்ற பல இந்திப் பாடல்களுக்காகவும், பல பரிந்துரைகளைப் பெற்ற விருதுகளுக்காகவும் அறியப்பட்டவர்.

வாழ்க்கையும் தொழிலும்

[தொகு]

பூமி திரிவேதி குசராத்தின் வடோதராவிலுள்ள இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.[1] 8ம் வகுப்பு படிக்கும்போதே இசையைக் கற்க ஆரம்பித்தார். இவரது தந்தை இரயில்வே ஊழியர். நாட்டுப்புறப் பாடகரான இவரது தாயார் சொந்த இசைக் குழுவைக் கொண்டுள்ளார்.[2] இவரது மூத்த சகோதரி ஒரு பொறியாளர். மேலும், பயிற்சி பெற்ற பரத நாட்டியக் கலைஞர்.[3][4]

2007 ஆம் ஆண்டில், இந்தியன் ஐடல் 3 நிகழ்ச்சியில் நடிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டதால் நிகழ்ச்சியிலிருந்து விலகினார். அடுத்த ஆண்டு மீண்டும் இந்தியன் ஐடல் 4 நிகழ்ச்சியில் நடிக்க தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இவரது அத்தை மார்பக புற்றுநோயால் இறந்ததால் மீண்டும் நிகழ்ச்சியை விட்டு வெளியேற வேண்டியிருந்தது.[3] மீண்டும் இந்தியன் ஐடல் 5 நிகழ்ச்சிக்குத் திரும்பினார். இதில் இவர் இரண்டாமிடத்தைப் பெற்றார்.[5]

இவர் தனது பாலிவுட் வாழ்க்கையை 2012 ஆம் ஆண்டு வெளியான பிரேம் மாயீ படத்தில் "பஹ்னே டே" பாடலுடன் தொடங்கினார்.[1] இருப்பினும், 2013 ஆம் ஆண்டு வெளியான சஞ்சய் லீலா பன்சாலியின் கோலியோன் கி ராஸ்லீலா: ராம்-லீலா திரைப்படத்தில் பிரியங்கா சோப்ரா பாடும் ராம் சாஹே லீலா என்ற பாடலுக்கு குரல் கொடுத்ததன் மூலம் புகழ் பெற்றார்.[6] பன்சாலி தனது அடுத்த படத்திற்கு ஒரு பாடலைப் பாடுவதற்கு வேறு குரலைத் தேடுவதாகக் கூறப்பட்டபோது, ஷைல் ஹடா ஏற்பாடு செய்திருந்த ஒரு பாடலுக்கு குஜராத்தி வரிகளை எழுதவும், அந்தப் பாடலைப் பாடவும் இவர் முதலில் அணுகப்பட்டார்.[7] இப்பாடல் பார்வையாளர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதே நேரத்தில் விமர்சகர்கள் பாடலில் இவரது வரிகளைப் பாராட்டினர்.[8] பாலிவுட் பாடல்கள் தவிர, தேசிய விருது பெற்ற ஹெல்லாரோ திரைப்படத்தின் ' வாக்யோ ரே தோல் ' பாடல் உட்பட பல குசராத்தி படங்களுக்கும் பாடல்களை பதிவு செய்துள்ளார்.[9][10][11]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 "Performing live is very challenging: Bhoomi Trivedi". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 16 June 2014. பார்க்கப்பட்ட நாள் 1 November 2014.
  2. Sunayana, Suresh (1 November 2013). "I heard taunts from people for three years after Indian Idol: Bhoomi Trivedi". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 1 November 2014.
  3. 3.0 3.1 "Bhumi Trivedi Bio". In.com. Archived from the original on 2 December 2013. பார்க்கப்பட்ட நாள் 1 November 2014.
  4. "With Carnival Raas Jalsa. Beautiful Blend of Culture Tradition Music and Masti!". WordPress.com. 24 September 2014. பார்க்கப்பட்ட நாள் 1 November 2014.
  5. "Contestants of Indian Idol 5". Indian idol. Archived from the original on 1 November 2014. பார்க்கப்பட்ட நாள் 1 November 2014.
  6. "Bhoomi Trivedi: I wish to take one step at a time". Radio And Music. 26 September 2014. பார்க்கப்பட்ட நாள் 1 November 2014.
  7. Sunayana, Suresh (1 November 2013). "I heard taunts from people for three years after Indian Idol: Bhoomi Trivedi". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் 1 November 2014.
  8. Vijayakar, Rajiv (17 October 2013). "Goliyon Ki Raasleela Ram-leela Critic Music Review". Bollywood Hungama. பார்க்கப்பட்ட நாள் 1 November 2014.
  9. Vijayakar, Rajiv (17 October 2013). "Goliyon Ki Raasleela Ram-leela Critic Music Review". Bollywood Hungama. பார்க்கப்பட்ட நாள் 1 November 2014.
  10. "We just have one last song left to shoot: JK". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2 October 2014. பார்க்கப்பட்ட நாள் 1 November 2014.
  11. Listen to Vaagyo Re Dhol Song by Bhoomi Trivedi on Gaana.com, பார்க்கப்பட்ட நாள் 28 January 2020

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூமி_திரிவேதி&oldid=3742557" இலிருந்து மீள்விக்கப்பட்டது