புல்விரியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புல்விரியன்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
குடும்பம்:
Viperidae
துணைக்குடும்பம்:
Pit viper
பேரினம்:
இனம்:
T. gramineus
இருசொற் பெயரீடு
Trimeresurus gramineus
(Shaw, 1802)
வேறு பெயர்கள்
  • Coluber Gramineus Shaw, 1802
  • Coluber viridis Bechstein, 1802
  • Vipera viridis Daudin, 1803
  • Trimeresurus viridis
    Lacépède, 1804
  • [Cophias] viridis Merrem, 1820
  • Trigonoceph[alus]. viridis
    Schinz, 1822
  • Bothrops viridis Wagler, 1830
  • Trigonoc[ephalus]. viridis
    Schlegel, 1837
  • Trimesurus viridis Gray, 1842
  • [Bothrophis] viridis Fitzinger, 1843
  • Trigonocephalus gramineus
    Cantor, 1847
  • Trigonocephalus (Cophias) viridis
    Jerdon, 1854
  • B[othrops]. viridis var. fario
    Jan, 1863
  • B[othrops]. viridis var. Genei
    Jan, 1863
  • Trimeresurus gramineus
    Günther, 1864
  • Crotalus Trimeresurus gramineus
    – Higgins, 1873
  • Lachesis gramineus
    Boulenger, 1896
  • Trimeresurus gramineus gramineus Stejneger, 1927
  • Trimeresurus occidentalis
    Pope & Pope, 1933
  • Trimeresurus gramineus
    – Taub, 1964
  • Trimeresurus gramineus
    – Golay et al., 1993[2]
  • Trimeresurus (Craspedocephalus) gramineus – David et al., 2011[3]

புல்விரியன் (Bamboo pit viper) என்பது ஒரு நஞ்சுள்ள பாம்பு இனமாகும். இவை தென் இந்தியாவில் காணப்படுகின்றன. இதற்கு கிளையினங்கள் இருப்பதாக இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை.[2]

விளக்கம்[தொகு]

இப்பாம்பு சற்றே மேடிட்ட செதில்களுடன், சற்று மங்கிய பச்சை நிறத்தில் உள்ளபாம்பு ஆகும். இதன் கழுத்து மெல்லியதாகவும், தலை முக்கோண வடிவில் அகன்றதாகவும் இருக்கும். தலையில் உள்ள செதில்கள் பொடிப்பொடியாகவும், உடலின் மேற்புறமுள்ள செதில்கள் கொஞ்சம் மேடுபட்டுக் காணப்படும். இப்பாம்புகள் 2.5 அடி (0.76 மீ) நீளம் வரை வளரும் இதில் வால் 5.5 அங்குல (14 செ.மீ.) ஆகும்.[4]

புல்விரியன், ராஜ்மச்சி.

புவியியல் எல்லை[தொகு]

இந்த பாம்புகள் தென் இந்தியாவில் காணப்படுகின்றன. இது அரிதாக மராட்டியத்தின் ஹரிஷ்சந்த்ரகாட் மலைப்பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலைத்தோடரைச் சேர்ந்த மராட்டியத்தின் அக்க சயாத்திரி பகுதிகளிலும் காணப்படுகிறது.

வாழ்விடம்[தொகு]

இப்பாம்புகள் நீரோடைகளுக்கு அருகில் உள்ள மூங்கில்செடிகள் அடர்ந்த காட்டுப் பகுதிகள் போன்ற இடங்களில் காணப்படுகின்றன.[5]

நடத்தை[தொகு]

இவை மரங்களைச் சார்ந்து வாழக்கூடிய இரவாடிகள் ஆகும். இவற்றிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் போது, கடிக்கத் தயங்காது.[5]

உணவு[தொகு]

இது உணவாக பல்லிகள் சிறு பறவைகள் போன்றவற்றை உட்ககொள்கிறது..[5]

இனப்பெருக்கம்[தொகு]

இவை தன் உடலுக்குள்ளேயே முட்டையை வைத்திருந்து பொரித்து பாம்புகளை ஈனும். பெண் பாம்புகள் ஆறு முதல் பதினோறு குட்டிகளை ஈனும். குட்டிகள் நீளம் 4.5 அங்குளம் வரை இருக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.iucnredlist.org/details/178245/0
  2. 2.0 2.1 McDiarmid RW, Campbell JA, Touré T. 1999. Snake Species of the World: A Taxonomic and Geographic Reference, Volume 1. Herpetologists' League. 511 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-893777-00-6 (series). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-893777-01-4 (volume).
  3. The Reptile Database. www.reptile-database.org.
  4. Boulenger GA. 1890. The Fauna of British India, Including Ceylon and Burma. Reptilia and Batrachia. Secretary of State for India in Council. (Taylor and Francis, Printers.) London. xviii + 541 pp. (Trimeresurus, p. 425 & Trimeresurus gramineus, pp. 429-430.)
  5. 5.0 5.1 5.2 Das, Indraneil. 2002. A Photographic Guide to Snakes and Other Reptiles of India. Ralph Curtis Books. Sanibel Island, Florida. 144 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-88359-056-5. (Trimeresurus gramineus, p. 65.)
"https://ta.wikipedia.org/w/index.php?title=புல்விரியன்&oldid=3814607" இலிருந்து மீள்விக்கப்பட்டது