உள்ளடக்கத்துக்குச் செல்

புரதப்பீழை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புரதப்பீழை நோய் (TSEs)
படத்தில் காணப்படுவது நுண் ஓட்டைகள் கொண்ட புரதப்பீடைகளால் தாக்கப்பட்ட இழையமாகும். இது பஞ்சு போன்றத் தோற்றத்தைப் பெறுவதுடன், மூளையிலுள்ள பஞ்சு போன்ற இழையங்களைத் தாக்கி அழிக்கிறது.
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
ஐ.சி.டி.-10A81
ஐ.சி.டி.-9046

புரதப்பீழை (Prion) என்பது நோய் உண்டாக்கும் திறனுள்ள ஒரு நோய்க்காரணி ஆகும். புரதபீழைகளில் எந்த ஒரு மரபுப் பொருளும் இல்லை என்பதனால், இவை ஏனைய நோய்க்காரணிகளிடம் இருந்து முரண்பட்டிருக்கின்றன. தீநுண்மியைப் போன்று இவையும் நோய் உண்டாக்கும் ஒரு காரணியாக இருப்பினும், தீநுண்மிகள் மரபுப் பொருளான டி. என். ஏ. அல்லது ஆர்.என்.ஏ யைக் கொண்டிருப்பதனால், அவற்றிலிருந்து இவை வேறுபடுகின்றன. புரதப்பீழைகள் சில முறைவடிவம்பெறா அல்லது ஒழுங்கற்ற புரதப்பொருளால் ஆக்கப்பட்டு, இவ்வகையான ஒழுங்கற்ற புரதத்தைக் கடத்தும் தன்மையைப் பெற்றிருப்பதனால், மனிதர்களிலோ அல்லது வேறு விலங்குகளிலோ இறப்பை ஏற்படுத்தக்கூடிய தொற்றும் தன்மை கொண்ட தொற்றுநோய்களை உருவாக்குகிறது. இவ்வகையான ஒழுங்கற்ற புரதங்கள் புரத மடிப்படைதல் மூலம் ஏற்படுகிறது. ஒழுங்கற்ற புரதங்கள் இழையங்களில் மாறுதல்களை உண்டுசெய்து, அவை நோயாக உருவெடுக்கின்றன. பொதுவாக மனிதரில் இவ்வகையான புரதப்பீழைகளால் நரம்பணுவின் அமைப்பு, தொழிற்பாடு ஆகியவற்றில் பாதிப்பு ஏற்பட்டு நரம்பணுச்சிதைவு en:Neurodegeneration நடைபெற்று, நரம்பணுக்கள் இறப்பதுவரை செல்லக் கூடிய நரம்பணுச்சிதைவு நோய்கள் ஏற்படுகின்றன.[1]


  1. "Prion diseases". Diseases and conditions. National Institute of Health.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரதப்பீழை&oldid=3679453" இலிருந்து மீள்விக்கப்பட்டது