உள்ளடக்கத்துக்குச் செல்

புதூர் மாரியம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புதூர் மாரியம்மன் கோயில் என்பது திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் புதூரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

அமைவிடம்

[தொகு]

திருவண்ணாமலையின் மேற்கிலும், ஜவ்வாது மலை கிழக்கிலும், செங்கத்தில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் போளூர் செல்லும் சாலையில் புதூர் செங்கம் எனும் ஊரில் பீமநதிக்கரையில் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது.

இத்தலம் சங்க கால மன்னன் நன்னன் சேய் நன்னனால் வழிபடப் பெற்றது. இக்கோயிலுக்குச் செல்ல திருவண்ணாமலையில் இருந்தும் செங்கத்தில் இருந்தும் பேருந்து வசதி உள்ளது.

தலச் சிறப்பு

[தொகு]

பக்தர்கள் தங்கள் குறைகள் நிவர்த்தி அடைய வேண்டி அம்மனின் திருமேனிக்கு எண்ணெய் அபிசேகம் செய்கின்றனர். இந்த எண்ணெயை வாங்கி கண்களில் தேய்த்தால் குறைபாடு உடைய கண்கள் குணமடைகின்றன என நம்புகின்றனர்.

கோயில் திறந்திருக்கும் நேரம்

[தொகு]

காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை மாலை 6.00 மணி முதல் 7.00 மணி வரை

ஆதாரங்கள்

[தொகு]
  1. "District Wise Temple list". temple.dinamalar.com.