உள்ளடக்கத்துக்குச் செல்

பியசீலி விஜேகுணசிங்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பியசீலி விஜேகுணசிங்க
பிறப்பு(1943-02-22)பெப்ரவரி 22, 1943
இறப்புசெப்டம்பர் 2, 2010(2010-09-02) (அகவை 67)
தேசியம்இலங்கையர்

பியசீலி விஜேகுணசிங்க (பிறப்பு :2 பெப்ரவரி 1943 , இறப்பு :2 செப்டம்பர் 2010)இலங்கை இலக்கிய திறனாய்வாளரும், ட்ரொட்ஸ்கி மற்றும் மார்க்சிய அறிஞரும் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின்  உறுப்பினரும் ஆவார். விஜி குணசிங்கா கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிங்களத் துறையின் தீன் பணி புரிந்துள்ளார். 44 வருடங்கள் விரிவுரையாளராகவும்  கடமையாற்றினார். இவர் சோசலிச சமத்துவக் கட்சியில் 1968 முதல் அவரது இறுதிக்காலம் வரை உறுப்பினராக இருந்தார்.

வாழ்க்கை

[தொகு]

பியசீலி விஜே குணசிங்க இலங்கை பேராதனை பல்கலைக்கழகத்தில் மாணவராக கல்வி கற்கும் போதே முக்கிய அரசியல் போராட்டங்களை நடத்தினார். 1968ஆம் ஆண்டு புரட்சிகர கம்யூனிஸ்ட் லீகில் இணைந்து சோசலிசம் மற்றும் சர்வதேசிய வாதியாக மாறினார். புரட்சிகர சோசலிச லீக் பின்னால் சோசலிச சமத்துவக் கட்சி (SEP) என்ற பெயரைப் பெற்றது. இவர் பிரித்தானியாவில் புரட்சிகர கட்சியில்  செயற்பட்டு கொண்டு தமது முதுகலை பட்ட படிப்பை தொடர்ந்தார்.

மாக்சிய இலக்கிய திறனாய்வு தொடர்பாக புத்தகங்களை எழுதியும் இத்தலைப்பில் பல விரிவுரைகள் வழங்கியுள்ளார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் சிங்களத்துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார். அங்கு மார்க்சிய இலக்கிய திறனாய்வு தொடர்பாக கற்பித்தார். குணசிங்க மார்க்சிய புத்தகங்களை சிங்களத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

விஜேகுணசிங்க சோசலிச சமத்துவ கட்சியின் பொதுச் செயலாளர் விஜே டயஸ் என்பவரை மணமுடித்தார். இவர்களுக்கு கீர்த்தி என்ற மகன் உள்ளார்.

2010ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 67ம் வயதில் காலமானார்.

புத்தகங்கள்

[தொகு]

பின்வரும் புத்தகங்களை சிங்களத்தில் எழுதியுள்ளார்.

  • இலக்கியத்தில் ஒரு பொருள் முதல்வாத ஆய்வு (1982) A Materialist Study of Literature (1982)
  • நவீன சிங்கள இலக்கியத் திறனாய்வில் மார்க்சிஸ்ட் ஆய்வு (1987) A Marxist Study of Modern Sinhala Literary Criticism
  • கலை திறனாய்வில் மார்க்சிய கொள்கைகள் சுசரிதா கம்லதாவிற்கு பதில் (1995) A Reply to Susaritha gamlatha Marxist principles on Criticism of Art
  • சிறிய விசயங்களின் கடவுள் (விமர்சனம் மற்றும் பதில்) The god of small things (2004)

மொழிபெயர்ப்பு

[தொகு]

பின்வரும் ஆங்கில புத்தகங்களை சிங்களத்தில் மொழிபெயர்த்தார்.

.

  • நான்காம் அகில வரலாற்றில் கெரி ஹெலியும் அவரிடைய இடமும் (1993) Gerry healy and his place inthe history of the fourth international
  • நாம் பாதுகாக்கும் பாரம்பரியம்(1990) The heritage defend by David North
  • போல்ஷி மற்றும் அவந்த்-கார்டே கலைஞர்கள் (1993) Bolshevism and the Avant-Garde Artists
  • சோசலிசத்தின் அழகியல் கூறுகள் எழுதியவர் டேவிட் வால்ஸ் (1998) A Aesthetic component of socialism by David Walsh
  • மார்க்சியத்தின் பாதுகாப்பு எழுதியவர் லியோன் ட்ரொட்ஸ்கி In defense of Marxism by Leon Trotsky

குறிப்புகள்

[தொகு]
  1. http://www.wsws.org/articles/2010/sep2010/piya-s06.shtml
  2. http://www.nation.lk/2010/10/31/eyefea4.htm பரணிடப்பட்டது 2016-07-25 at the வந்தவழி இயந்திரம்
  3. https://books.google.com/books?id=MLqmdDp3l0oC&pg=PA274#v=onepage&q&f=false

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பியசீலி_விஜேகுணசிங்க&oldid=3220991" இலிருந்து மீள்விக்கப்பட்டது