பினு சதானந்தன்
பினு சதானந்தன் | |
---|---|
பிறப்பு | 1 சூன் 1980 காலடி, இடவூர், எர்ணாகுளம், கேரளா |
தேசியம் | இந்தியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | சிறீ சங்கரா கல்லூரி காலடி, எர்ணாகுளம் |
பணி | திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் |
செயற்பாட்டுக் காலம் | 2014–தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | கீது பினு |
பிள்ளைகள் | 2 |
பினு சதானந்தன் (Binu Sadanandan) (பிறப்பு 23 சூலை) ஒரு இந்திய திரைப்பட இயக்குனரும், திரைக்கதை எழுத்தாளரும், மலையாளத் திரையுலகில் பணியாற்றியதற்காக மிகவும் பிரபலமானவர்.[1]
பினு 2014 ஆம் ஆண்டு இதிகாசா என்றத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் ஸ்டைல் (2016 படம்) (2016) என்ற தனது இரண்டாவது படத்தை இயக்கினார்.[2] இராஜேசு அகஸ்டின் தயாரித்த இதிஹாசா வெளியான பிறகு பினு பிரபலமடைந்தார்.
தொழில்
[தொகு]இவர், புகைப்படக் கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இதற்கிடையில், இதிகாசாவின் ஒரு வரி கதையை உருவாக்கினார். இது இவரது முதல் இயக்கமாக மாறியது. படம் 2014இல் வெளியிடப்பட்டது. இந்தப் படம் திரையரங்கில் நல்ல வசூலைக் கொண்டிருந்தது.[3]
இவரது அடுத்த படம் ஸ்டைல் 2016இல் வந்தது. இதுவும் ஒரு நல்ல வெற்றியைப் பெற்றது. தயாரிப்பில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலதிகமான ஆனாலும், ஒரு இயக்குநராக இவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.[4]
சொந்த வாழ்க்கை
[தொகு]இவர், கே.சதானந்தன், இராதாமணி ஆகியோருக்குப் பிறந்தார். இவர் தனது குழந்தைப் பருவத்தை எர்ணாகுளத்தில் உள்ள காலடியில் கழித்தார். காலடியின் சிறீ சங்கரா கல்லூரியில் இந்தியில் இளங்கலை பட்டம் பெற்றார்.[5] இவருக்கு கீது என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "I want to be known as the common man's director, says Binu S". The Times of India. 20 November 2014. http://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/I-want-to-be-known-as-the-common-mans-director-says-Binu-S/articleshow/45204273.cms.
- ↑ "The real mass is yet to come: Binu...". மலையாள மனோரமா. 8 January 2016.
- ↑ "Ithihasa Review - Malayalam Movie Ithihasa nowrunning review". nowrunning.com. Archived from the original on 17 ஆகஸ்ட் 2017. பார்க்கப்பட்ட நாள் 17 August 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Movies were always on my mind: Binu - Home". தி டெக்கன் குரோனிக்கள். பார்க்கப்பட்ட நாள் 6 March 2014.
- ↑ "Unni Mukundan-Binu S movie titled 'Style'". 4 June 2015.