உள்ளடக்கத்துக்குச் செல்

பி. என். வினயச்சந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி.என்.வினயச்சந்திரன்
P. N. Vinayachandran
பிறப்புதிருச்சூர், இந்தியா
துறைகடலியல்
பணியிடங்கள்வளிமண்டல மற்றும் கடல்சார் அறிவியல் மையம், இந்திய அறிவியல் நிறுவனம், பெங்களூர்.
கல்வி கற்ற இடங்கள்இந்திய அறிவியல் நிறுவனம்
ஆய்வு நெறியாளர்சத்தீசு ரமேசு செட்டி
சுலோச்சனா காட்கில்
அறியப்படுவதுஇந்தியப் பெருங்கடல்

வெப்ப இயக்கவியல் மற்றும் உப்புத்தன்மை விளைவுகள் கடலில் உடல் - உயிரியல் தொடர்புகள் கடல்சார் புல சோதனைகள்

நதி கடல் தொடர்புகள்
விருதுகள்சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது (2008), இந்திய அறிவியல் அகாடமி உறுப்பினர், இயே. சி போசு தேசிய உறுப்பினர், தேசிய அறிவியல் அகாடமியின் உறுப்பினர்

பி. என். வினயச்சந்திரன் (P. N. Vinayachandran) இந்தியாவின் கர்நாடக மாநிலம் பெங்களூருவிலுள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தின் வளிமண்டல மற்றும் கடல்சார் அறிவியல் மையத்தில் கடலியல் துறை பேராசிரியராகப் பணிபுரிகிறார். 2008 ஆம் ஆண்டு இவருக்கு சாந்தி சுவரூப் பட்நாகர் விருது வழங்கப்பட்டது.[1]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

பி.என்.வினயச்சந்திரன் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். இந்திய அறிவியல் நிறுவனத்தில் கடலியல் பாடத்தில் முதுநிலை அறிவியல் பட்டமும் பின்னர் 1996 ஆம் ஆண்டில் கடலியல் துறையில் முனைவர் பட்டமும் பெற்றார். டோக்கியோ பல்கலைக்கழகத்தில் முதுகலை ஆராய்ச்சியை மேற்கொண்ட இவர் சப்பானில் தொடர்ந்து உலக மாற்றத்திற்கான எல்லை அமைப்பில் மூத்த ஆராய்ச்சியாளராக பணியாற்றினார். 1999 ஆம் ஆண்டு இந்தியாவுக்குத் திரும்பினார். பெங்களூரிலுள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தின் வளிமண்டல மற்றும் கடல்சார் அறிவியல் மையத்தில், தற்போது கடலியல் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Brief Profile of the Awardee-PN Vinayachandran". SSB Prize. 2017-11-08. பார்க்கப்பட்ட நாள் 2017-11-08.

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._என்._வினயச்சந்திரன்&oldid=3623102" இலிருந்து மீள்விக்கப்பட்டது