உள்ளடக்கத்துக்குச் செல்

பால், பாலின வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பால், பாலின வேறுபாடு (distinction between sex and gender) என்பது ஒரு தனியரின் உயிரியலான பால்பகுப்பு (தனியரின் உடற்கூறான இனப்பெருக்க அமைப்பு), அவரது பாலினம் சார்ந்த துணைநிலைப் பாலுணர்வுப் பான்மைகள் ஆகியவை முறையே பாலையும் பாலினத்தையும் வேறுபடுத்துகிறது. (இரண்டாவதாகக் குறிப்பிட்ட பாலினம் சார்ந்த துணைநிலைப் பான்மைகள் என்பவை தனியரின் பாலினப் பாத்திரம் பாலுணர்வு அடிப்படையிலான சமூகப் பாத்திரத்தையோ அல்லது பாலின அடையாள அக விழிப்புணர்வு சார்ந்த தன்க்குரிய பாலின இனங்காணலையோ சுட்டலாம்).[1][2] சில சூழல்களில், ஒரு தனியரின் பிறப்புவழி பால்பகுப்பும் பாலினமும் ஒன்றாக அமைவதில்லை; அவர் பெயெபலினராக இருக்கலாம்.[1] பிற நேர்வுகளில், ஒரு தனியரின் உயிரியலான பால்பகுப்பு சார்ந்த பாலுணர்வுப் பான்மைகள் பாலுணர்வு வரையறுப்பைச் சிக்கலானதாக அமையலாம்; அவர் ஊடுறவுப் பாலினராக இருக்கலாம்.

பால், பாலின வேறுபாடு (distinction between sex and gender) என்பது ஒரு தனியரின் உயிரியலான பால்பகுப்பு (தனியரின் உடற்கூறான இனப்பெருக்க அமைப்பு), அவரது பாலினம் சார்ந்த துணைநிலைப் பாலுணர்வுப் பான்மைகள் ஆகியவை முறையே பாலையும் பாலினத்தையும் வேறுபடுத்துகிறது. (இரண்டாவதாகக் குறிப்பிட்ட பாலினம் சார்ந்த துணைநிலைப் பான்மைகள் என்பவை தனியரின் பாலினப் பாத்திரம் பாலுணர்வு அடிப்படையிலான சமூகப் பாத்திரத்தையோ அல்லது பாலின அடையாள அக விழிப்புணர்வு சார்ந்த தன்க்குரிய பாலின இனங்காணலையோ சுட்டலாம்).[1][2] சில சூழல்களில், ஒரு தனியரின் பிறப்புவழி பால்பகுப்பும் பாலினமும் ஒன்றாக அமைவதில்லை; அவர் பெயர்பாலினராக இருக்கலாம்.[1] பிற நேர்வுகளில், ஒரு தனியரின் உயிரியலான பால்பகுப்பு சார்ந்த பாலுணர்வுப் பான்மைகள் பாலுணர்வு வரையறுப்பைச் சிக்கலானதாக அமையலாம்; அவர் ஊடுறவுப் பாலினராக இருக்கலாம்.

மக்கள் பேச்சு வழக்கில், பாலும் பாலினமும் ஒன்றுக்கொன்று மாறி வழங்குவதுண்டு.[3][4] சில அகரமுதலிகளிலும்கல்விப் புலங்களிலும் இவற்ருக்கு வேறுபட்ட வரையறைகளையோ சில அகரமுதலிகள் சரியான வரையறைகளையோ தருவதுண்டு. செருமானியம், ஃபின்னியம் போன்ற சில மொழிகளில் பாலுக்கும் பாலினத்துக்கும் தனியான சொற்கள் இல்லாததால், பயன்பாட்டுச்சூழல் சார்ந்தே பொருள் உணரப்படுகிறது.

அறிவியல் அறிஞரிடையே, பாலியல் வேறுபாடுகள் என்பது (பாலின வேறுபாடுகளோடு ஓப்பிடுகையில் ) பாலியல் தேர்வு சார்ந்து படிமலர்ந்ததாகக் கருதும் இருபாலியல் வேறுபாடுகளே வகைமையாகக் கொள்ளப்படுகின்றன.[5][6]

பால்

[தொகு]

இருபால்களையும்வரையறுக்கும் கூறாக பாற்கலங்களின் உருவளவே அமைகிறது. வரையறைப்படி, ஆண்கள் விந்து எனும்சிறிய இயங்குதிற பாற்கலங்களைப் பெற்றுள்ளனர்; பெண்கள் அண்டகம் அல்லது முட்டை எனும் பெரிய இயங்காத பாற்கலங்களைப் பெற்றுள்ளனர் .[7]மாந்தரில், வகைமை ஆண், பெண் பாலியல் வேறுபாடு ஒய் குறுமவகம் இருத்தல், இல்லாமையாலும், அண்டகம்,அல்லது விரைப்பை போன்ற பாலுறுப்பு வகைமையாலும் பால்சுரப்புகளாகிய ஆண்மைச் சுரப்பு, பெண்மைச் சுரப்பு சமனிலையாலும், கருப்பை, ஆண்மைநிலை நாளம் போன்ற இனப்பெருக்க அமைப்பு வகைமையாலும் ஆண்குறி அல்லது பெண்குறி போன்ற புறநிலைப் பிறப்புறுப்பு வகைமையாலும் அமைகிறது.[8] கலப்பு பாலியல் காரணிகள் உள்ள மக்கள் ஊடுபாலினர் ஆவர். பிறப்புநிலை பால்தன்மையில் இருந்து வேறுபடும் அக உளவியல் பட்டறிவு உள்ளவர்கள் பெயர்பாலினர், பெயர்பாலுணர்வினர், அல்லது இருபால்சாரா விதிர்நிலைப் பாலினர் ஆவர்.

இந்த நடத்தைகள் அனைத்தும் உயிரியல், சுற்றுச்சூழல் ஊடாட்டத்தால் உருவாகும் சிக்கலான புறத்தோற்ற வகைமைகளாகும் எனும் பொதுக் கருத்தேற்பு அறிவியலாரிடையே நிலவுகிறது; எனவே, இயற்கை, செயற்கைக் கருத்தின வகைபாடு தவறான வழிநிலையாகும்.[9][10] வழக்கமாக பாலியல் வேறுபாடுகள் எனும் சொல், பாலியல் தேர்வால் படிமலர்ந்ததாகக் கருதப்படும் இருபாலியல் வகைமை பண்புக்கூறுகளையே சுட்ட ஆளப்படுகிறது. எடுத்துகாட்டாக, உயரம் சார்ந்த மந்தரின் "பாலியல் வேறுபாடு" பாலியல் தேர்வின் விளைவாகும். ஆனால், தலையில் உள்ள முடியின் நீளம் சார்ந்த "பாலின வேறுபாடு " (ஆண்களை விட பெண்களின் முடி நீலமாக அமைதல்) பாலியல் தேர்வால் ஏற்படுவதன்று.[5][6] தனியரின் பாலியல்பு அவரது நடத்தையில் தாக்கம் செலுத்துகிறதென அறிவியல் ஆராய்ச்சி காட்டுகிறது.[11][12][13][14][15]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 Prince, Virginia. 2005. "Sex vs. Gender." International Journal of Transgenderism. 8(4).
  2. 2.0 2.1 Neil R., Carlson (2010). Psychology: The science of behavior. Fourth Canadian edition. Pearson. pp. 140–141. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-57344-199-5.
  3. Udry, J. Richard (November 1994). "The Nature of Gender". Demography 31 (4): 561–573. doi:10.2307/2061790. பப்மெட்:7890091 இம் மூலத்தில் இருந்து 2016-12-11 அன்று. பரணிடப்பட்டது.. http://archive.wikiwix.com/cache/20161211012757/https://www.unc.edu/courses/2006fall/econ/586/001/Readings/Udry_Nature_Gender.pdf. 
  4. David Haig (biologist) (April 2004). "The Inexorable Rise of Gender and the Decline of Sex: Social Change in Academic Titles, 1945–2001". Archives of Sexual Behavior 33 (2): 87–96. doi:10.1023/B:ASEB.0000014323.56281.0d. பப்மெட்:15146141. http://www.oeb.harvard.edu/faculty/haig/publications_files/04inexorablerise.pdf. 
  5. 5.0 5.1 Mealey, L. (2000). Sex differences. NY: Academic Press.
  6. 6.0 6.1 Geary, D. C. (2009) Male, Female: The Evolution of Human Sex Differences. Washington, D.C.: American Psychological Association
  7. Daly, M. & Wilson, M. (1983). Sex, evolution and behavior. Monterey: Brooks Cole
  8. Knox, David; Schacht, Caroline. Choices in Relationships: An Introduction to Marriage and the Family. 11 ed. Cengage Learning; 2011-10-10. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781111833220. p. 64–66.
  9. Francis, D., & Kaufer, D. (2011). Beyond Nature vs. Nurture. Beyond Nature vs. Nurture பரணிடப்பட்டது 2014-01-04 at the வந்தவழி இயந்திரம். The Scientist, October 1, 2011.
  10. Ridley, M. (2004). The Agile Gene: How Nature Turns on Nurture. NY: Harper Perennial
  11. Haier, Richard J, Rex E Jung, and others, 'The Neuroanatomy of General Intelligence: Sex Matters', in NeuroImage, vol. 25 (2005): 320–327. [1]
  12. "Sex differences in the brain's serotonin system". Physorg.com. Archived from the original on 2011-08-17. பார்க்கப்பட்ட நாள் 2013-04-24.
  13. "Emotional Wiring Different in Men and Women". LiveScience. 2006-04-19. Archived from the original on 2011-08-17. பார்க்கப்பட்ட நாள் 2013-04-24.
  14. Frederikse ME; Lu A; Aylward E; Barta P; Pearlson G (December 1999). "Sex differences in the inferior parietal lobule". Cerebral Cortex 9 (8): 896–901. doi:10.1093/cercor/9.8.896. பப்மெட்:10601007 இம் மூலத்தில் இருந்து 2012-07-11 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120711004717/http://cercor.oxfordjournals.org/cgi/pmidlookup?view=long&pmid=10601007. 
  15. பெண்கள் பின்பக்க மூளைப் புறணியில் அமையும் நரம்பன் அடர்த்தியை ஆண்கல்லைவிட கூடுதலாகப் பெற்றுள்ளனர் /Sandra Wittelson / Journal of Neuroscience #15 (1995).
"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்,_பாலின_வேறுபாடு&oldid=3793908" இலிருந்து மீள்விக்கப்பட்டது