பல்லாப்பூர் வனவிலங்கு சரணாலயம்
பல்லாப்பூர் வனவிலங்கு சரணாலயம் | |
---|---|
மான் பூங்கா | |
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
அமைவிடம் | பிர்பூம் மாவட்டம், மேற்கு வங்காளம், இந்தியா |
அருகாமை நகரம் | சாந்திநிகேதன் |
ஆள்கூறுகள் | 23°41′06″N 87°39′11″E / 23.685011°N 87.653021°E |
பரப்பளவு | 2 சதுர கிலோமீட்டர்கள் (0.77 sq mi) |
நிறுவப்பட்டது | 1977 |
பல்லாப்பூர் வனவிலங்கு சரணாலயம் (Ballabhpur Wildlife Sanctuary) மான் பூங்காவிற்கு பிரபலமானது. இந்த சரணாலயம் 1977 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்தியாவிலுள்ள மேற்கு வங்காள மாநிலத்தின் பிர்பூம் மாவட்டத்திலுள்ள போல்பூர் உட்பிரிவிலுள்ள சாந்திநிகேதன் அருகே இந்த வனப்பகுதி அமைந்துள்ளது.
நிலவியல்
[தொகு]இந்த வனவிலங்கு சரணாலயம் சாந்திநிகேதனில் அமைந்துள்ளது. இது சராசரியாக கடல் மட்டத்திலிருந்து 56 மீட்டர் (184 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.[1]
காலநிலை
[தொகு]கோடைகாலத்தில், வெப்பநிலை 40 ° C (104 ° F) க்கும் அதிகமாக இருக்கும். குளிர்காலத்தில் 10 ° C (50 ° F) குறைவாக இருக்கும். இந்த இடத்தின் ஆண்டு சராசரி மழைப்பொழிவு 1,212 மில்லிமீட்டர் (47.7 அங்குலம்) ஆக உள்ளது. பெரும்பாலும், பருவமழைக் காலம் ஜூன் முதல் அக்டோபர் வரை உள்ள காலமாக உள்ளது. [2][3]
விலங்குகள்
[தொகு]இக்காப்பகம் பலவகை மான்களின் இருப்பிடமாகும். இங்கு கலைமான்கள் மற்றும் புள்ளிமான்களை காணலாம். மேலும் நரிகள், நீர் பறவைகள், குள்ள நரிகள் ஆகியவற்றையும் காணலாம்.[4]
பார்வை நேரம்
[தொகு]இச்சரணாலயம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்திருக்கும். இது புதன் கிழமைகளில் மூடப்பட்டிருக்கும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Falling Rain Genomics, Inc - Santiniketan
- ↑ Mondal, Dipanwita, Ek Najare Birbhum Jela, Paschim Banga, Birbhum Special issue (in Bengali), February 2006, pp. 7–10 , Government of West Bengal
- ↑ Mondal, Dipanwita, Ek Najare Birbhum Jela, Paschim Banga, Birbhum Special issue (in Bengali), February 2006, pp. 7–10 , Government of West Bengal
- ↑ "West Bengal Wildlife Sanctuaries". Archived from the original on December 22, 2008. பார்க்கப்பட்ட நாள் 2009-03-22.