பரோடாவின் நிலவு
பரோடாவின் நிலவு (Moon of Baroda) என்பது இந்தியாவின் வடோதராவில் (பரோடா) கண்டுபிடிக்கப்பட்ட ஒரு வைரமாகும்.[1] இந்த வெட்டப்பட்ட வைரமானது 24.04 காரட்டுகள் (4.808 g) எடையுள்ளதாக இருந்தது. இது கேனரி மஞ்சள் நிறத்தில், பேரிக்காய் வடிவில் வெட்டப்பட்டிருந்தது. இது கண்டுபிடிக்கப்பட்டபோது, 25.95 காரட் (5.190 கிராம்) எடையுடன் இருந்தது. பரோடாவின் நிலவு வைரமானது முதலில் பரோடா மகாராஜாவுக்குச் சொந்தமானதாக இருந்தது. இந்த வைரம் கைக்வாட் மகாராஜா அரச குடும்பத்திடம் கிட்டத்தட்ட 500 ஆண்டுகள் இருந்தது. பிற்காலத்தில் இந்தக் கல்லை நடிகை மர்லின் மன்றோ[2] மற்றும் ஆஸ்திரியாவின் பேரரசி மரியா தெரசா ஆகியோர் அணிந்துள்ளனர்.[1][3]
விளக்கம்
[தொகு]பரோடாவின் நிலவு கிடைத்தபோது 25.95 காரட் (5.190 கிராம்) எடைக் கொண்டதாக இருந்தது. பின்னர் இது 24.04 காரட் (4.808 கிராம்) எடையில் பேரிக்காய் வடிவத்தில் வெட்டப்பட்டது.[4]
பரோடாவின் நிலவு குறித்து பிரபலாமாக ஒரு நம்பிக்கை நிலவியது. அதன்படி இந்த வைரமானது கடல் கடந்து சென்றால், அதன் உரிமையாளருக்கு தீவாய்ப்பை அளிக்கும் என்பதாகும்.[1]
வரலாறு
[தொகு]பரோடாவின் நிலவு வைரத்தின் முதல் உரிமையாளர் பரோடா மகாராஜா குடும்பத்தினர் ஆவர். அவர்களிடம் பல நூறாண்டுகள் இருந்துவந்தது. பின்னர் பரோடா அரச குடும்பத்தினர், ஆஸ்திரிய நாட்டு ஆப்சுபர்கு அரசமரபின் மகாராணியான மரிய தெரஸாவுக்குப் பரோடாவின் நிலவைப் பரிசுப் பொருளாக அனுப்பி வைத்தார்கள். ஆனால், இந்த வைரமானது பின்னர் பரோடா அரச குடும்பத்துக்கே திருப்பி அனுப்பப்பட்டது. 1860 ஆம் ஆண்டில், அது ஒரு அட்டிகையில் பதிக்கப்பட்டது. 1920களின் துவக்கத்தில் மகாராஜா சாயாஜி ராவ், இந்த வைரத்தை ஒருவருக்கு விற்றார். பரோடாவின் நிலவை அவர் யாரிடம் விற்றார் என்பது பற்றிய தகவல்கள் இல்லை.[1]
பின்னர் இந்த வைரம், 1940களில் பார்வைக்கு வந்தது. 1944இல் அமெரிக்காவைச் சேர்ந்த டெட்ராய்ட் நகரத்தின் புகழ்பெற்ற மேயர் ஜுவல்லரியின் நிர்வாகியான ரோஸன்பௌமிடம் பரோடாவின் நிலவு கைமாறியது. திரைப்பட நடிகையான மர்லின் மன்றோவைச் சந்தித்த, ரோஸன்பௌம் பரோடாவின் நிலவை அணியச் சொன்னார். மர்லின் மன்றோ பரோடா நிலவு வைரத்தைக் கழுத்தில் அணிந்துகொண்டு ஜென்டில்மேன் பிரிபேர் பாண்ட்ஸ் என்ற படத்தின் பாடல் காட்சியில் நடித்தார்.[5] பரோடாவின் நிலவு 1944 இல் ஒரு கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டது.[1][4]
2008இல் பெல்ஜியத்தின் வைர நகரமான அண்ட்வெர்பில் ‘உலகில் 51 தலைசிறந்த வைரங்கள்’ கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டது.[4][6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 Prashant Rupera (2008-02-03). "Moon of Baroda rises at Antwerp". The Times of India இம் மூலத்தில் இருந்து 2012-10-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121022035224/http://articles.timesofindia.indiatimes.com/2008-02-03/ahmedabad/27753204_1_baroda-marilyn-monroe-ravi-choksi. பார்த்த நாள்: 2008-11-01.
- ↑ "Red Carpet Marilyn Monroe". Diamond Divas. 2009-04-27. பார்க்கப்பட்ட நாள் 2009-04-27.
- ↑ "'Diamond Divas' exhibition honors Grace Kelly". National Jeweller Network. 2008-04-03. Archived from the original on 2008-04-08. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
- ↑ 4.0 4.1 4.2 "Diamond Divas exhibition to feature rare Moon of Baroda". Diamond World. 2008-03-21. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
- ↑ Dean Nelson (2007-04-01). "Christie’s hit by curse of the £5m necklace". London: Times Online. http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article1596823.ece. பார்த்த நாள்: 2008-11-01.
- ↑ Sloan, Gene. "The Moon of Baroda". USA Today. https://www.usatoday.com/travel/cruises/item.aspx?type=photo&photo_id=0gD04DMa6yfAl&tid=0aXO884bgl5JI&pn=0. பார்த்த நாள்: 2008-11-01.