உள்ளடக்கத்துக்குச் செல்

பன்னாட்டு வானொலி கண்காட்சி பெர்லின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐஃப்ஏ, 2010

ஐஎஃப்ஏ (IFA) என்று பரவலாக வழங்கப்படும் பன்னாட்டு வானொலி கண்காட்சி பெர்லின் (Internationale Funkausstellung Berlin) செருமனியில் பெர்லின் நகரில் நடைபெறும் மிகத் தொன்மையான தொழிற் கண்காட்சிகளில் ஒன்றாகும். 1924க்கும் 1939க்கும் இடையே இது ஆண்டுக்கொருமுறை நடைபெற்று வந்தது; 1950இலிருந்து 2005ஆம் ஆண்டுவரை இது இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வந்துள்ளது. தற்போது இது மீண்டும் ஆண்டுக்கொருமுறை செப்டம்பரில் நடைபெறுகிறது. நுகர்வு இலத்திரனியல் மற்றும் வீட்டுப் பொருட்களுக்கான உலகின் முன்னணி வணிக கண்காட்சிகளில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது. இந்தக் கண்காட்சியில் புதிய நகர்பேசிக் கருவிகளும் பிற தனிப்பயன்பாட்டு கருவிகளும் அறிமுகப்படுத்தப்படுவது வழக்கமாயுள்ளது.[1]

பொதுமக்களுக்கு தங்களுடைய அதிநவீன கருவிகளையும் மேம்படுத்தல்களையும் காட்சிப்படுத்த தயாரிப்பாளர்களுக்கு இது வாய்ப்பு வழங்குகிறது. அனைத்து செருமானிய ஊடகங்களிலும் நாளாந்தர நடப்புக்கள் வெளியாவதால் தகவல் மிகப் பரவலாக பரப்பப்படுகிறது. மேலும் பன்னாட்டளவிலும் ஊடகங்களில் இங்கு நடைபெறும் நிகழ்ச்சிகள் முன்னணி ஈர்ப்பைப் பெறுகின்றன. இக்கண்காட்சியின் வரலாற்றில் உலகளவிலான பல புத்தாக்கங்கள் இங்குதான் முதன்முதலாக அரங்கேறி உள்ளன.[2]

மேற்சான்றுகள்

[தொகு]
  1. "IFA 2014: Tech companies to unveil new smartphones and wearable headsets in Berlin". The Independent. 4 செப்டம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 4 செப்டம்பர் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. Gramophone: 206. November 1989. http://www.gramophone.net/Issue/Page/November%201989/206/766604/. பார்த்த நாள்: 4 August 2010. 

வெளி இணைப்புகள்

[தொகு]