பத்துநாள் விதி
Appearance
பத்துநாள் விதி (Ten day rule) கருவுறும் வாய்ப்புடைய தாய்மார்களிடம் அடிவயிற்றுப் பகுதியினை, மாதவிடாய் தோன்றிய முதல் பத்து நாட்களுக்குள் கதிர்ப்படம் எடுப்பதில் கேடில்லை என்பதைக் கூறுகிறது. பொதுவாக, கதிர் வீச்சு உடல் நலனைப் பாதிக்கும். கருவில் இருக்கும் குழந்தை மிகவும் கதிர் உணர்திறனுடையது. குறைந்த அளவு கதிர் ஏற்பளவும் கூட பிறக்க இருக்கும் குழந்தையிடம் பல தீய விளைவுகளைத் தோற்றுவிக்கும். குழந்தை இறந்தும் பிறக்கக்கூடும். எனினும் பத்து நாள் விதிப்படி, மாதவிடாய் தோன்றிய முதல் பத்து நாட்களில் கருவுறும் வாய்ப்பு மிகவும் குறைவு என்பதால் இந்தப் பத்து நாட்களில் கதிர்ப்படம் எடுக்கும்போது கதிர் வீச்சின் தீய விளைவுடன் குழந்தை பிறக்கக்கூடும் என்கின்ற அச்சம் இல்லை.
ஆதாரங்கள்
[தொகு]- BARC notes- பாபா அணு ஆராய்ச்சி மைய மாணவர்கான குறிப்பு.