படையியங்கு அரவம்
Appearance
போருக்கு அணி வகுத்துச் செல்வோர் வீர உணர்வு பெற வேண்டி, பேரிசை முழங்கும் கருவிகளை இசைவாணர்கள் முழக்கிக் கொண்டு முன்னே செல்வது அக்கால வழக்கம். இதனைப் படையியங்கு அரவம் என்று நூல்கள் குறிப்பிடுகின்றன.
போரிசைக் கருவிகள்
[தொகு]இந்திரசித்தன் போருக்குச் செல்லும்போது படையியங்கு அரவ முழக்கக் கருவிகளாக பயன்படுத்தப்பட்டனவற்றைக் கம்பர் பட்டியலிடுகிறார். அவற்றின் பெயர்களை இங்கு அகரவரிசையில் காணலாம் [1][2] [3]
- அம்பலி
- ஆகுளி (பெருந்துடி)
- உறுமை (உருமி)
- ஊமை
- கணுவை
- கண்டை
- கம்பலி
- கரடிகை
- காளம் (கொம்பு)
- கும்பிகை
- குறடு
- கொட்டி
- சகடை
- சங்கம்
- செண்டை
- தக்கை
- தார்
- திமிலை
- துடி (உடுக்கை)
- தூரி
- பணவம்
- பம்பை
- பறை
- பாண்டில்
- பேரி (பேரிகை)
- மணி (தேரில்)
- முரசம்
- வயிர்
- வேய்
தொல்காப்பியம்
[தொகு]வெட்சித் திணையின் 14 துறைகளில் ஒன்றாகத் தொல்காப்பியம் படை இயங்கு அரவத்தைக் குறிப்பிடுகிறது. [4]
நெடிபடு கானத்து நீள்வேல் மறவர்
அடிபடுத்து ஆர் அதர் செலவான் - துடி படுத்து
வெட்சி மலைய விலவார் மணி நிரைக்
கட்சியுள் காரி எழும்.
என்னும் பாடல் இதற்கு எடுத்துக்காட்டாகத் தரப்பட்டுள்ளது. [5]
மேற்கோள்
[தொகு]- ↑ கும்பிகை, திமிலை, செண்டை, குறடு, மாப் பேரி, கொட்டி
பம்பை, தார் முரசம், சங்கம், பாண்டில், போர்ப் பணவம், தூரி,
கம்பலி, உறுமை, தக்கை, கரடிகை, துடி, வேய், கண்டை,
அம்பலி, கணுவை, ஊமை, சகடையோடு ஆர்த்த அன்றே. கம்பராமாயணம் பிரமாத்திரப் படலம், பாடல்கள் 6-22-5, - ↑ யானைமேல் பறை, கீழ்ப்பட்டது எறி மணி இரதத்து ஆழி 6,
- ↑ சங்கு ஒலி, வயிரின் ஓசை, ஆகுளி, தழங்கு காளம்
பொங்கு ஒலி, வரி கண் பீலிப் பேர் ஒலி, வேயின் பொம்மல்7 - ↑ தொல்காப்பியம் புறத்தித்திணையியல் நூற்பா 1, 2, 3
- ↑ தொல்காப்பியம், இளம்பூரணர் உரை. சாரதா பதிப்பகம் வெளியீடு 2010, பக்கம் 471