படையியங்கு அரவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

போருக்கு அணிவகுத்துச் செல்வோர் வீர உணர்வு பெறவேண்டி, பேரிசை முழங்கும் கருவிகளை இசைவாணர்கள் முழக்கிக்கொண்டு முன்னே செல்வது அக்கால வழக்கம். இதனைப் படையியங்கு அரவம் என்று நூல்கள் குறிப்பிடுகின்றன.

போரிசைக் கருவிகள்[தொகு]

இந்திரசித்தன் போருக்குச் செல்லும்போது படையியங்கு அரவ முழக்கக் கருவிகளாக பயன்படுத்தப்பட்டனவற்றைக் கம்பர் பட்டியலிடுகிறார். அவற்றின் பெயர்களை இங்கு அகரவரிசையில் காணலாம் [1][2] [3]

 1. அம்பலி
 2. ஆகுளி (பெருந்துடி)
 3. உறுமை (உருமி)
 4. ஊமை
 5. கணுவை
 6. கண்டை
 7. கம்பலி
 8. கரடிகை
 9. காளம் (கொம்பு)
 10. கும்பிகை
 11. குறடு
 12. கொட்டி
 13. சகடை
 14. சங்கம்
 15. செண்டை
 16. தக்கை
 17. தார்
 18. திமிலை
 19. துடி (உடுக்கை)
 20. தூரி
 21. பணவம்
 22. பம்பை
 23. பறை
 24. பாண்டில்
 25. பேரி (பேரிகை)
 26. மணி (தேரில்)
 27. முரசம்
 28. வயிர்
 29. வேய்

தொல்காப்பியம்[தொகு]

வெட்சித் திணையின் 14 துறைகளில் ஒன்றாகத் தொல்காப்பியம் படை இயங்கு அரவத்தைக் குறிப்பிடுகிறது. [4]
நெடிபடு கானத்து நீள்வேல் மறவர்
அடிபடுத்து ஆர் அதர் செலவான் - துடி படுத்து
வெட்சி மலைய விலவார் மணி நிரைக்
கட்சியுள் காரி எழும்.
என்னும் பாடல் இதற்கு எடுத்துக்காட்டாகத் தரப்பட்டுள்ளது. [5]

மேற்கோள்[தொகு]

 1. கும்பிகை, திமிலை, செண்டை, குறடு, மாப் பேரி, கொட்டி
  பம்பை, தார் முரசம், சங்கம், பாண்டில், போர்ப் பணவம், தூரி,
  கம்பலி, உறுமை, தக்கை, கரடிகை, துடி, வேய், கண்டை,
  அம்பலி, கணுவை, ஊமை, சகடையோடு ஆர்த்த அன்றே. கம்பராமாயணம் பிரமாத்திரப் படலம், பாடல்கள் 6-22-5,
 2. யானைமேல் பறை, கீழ்ப்பட்டது எறி மணி இரதத்து ஆழி 6,
 3. சங்கு ஒலி, வயிரின் ஓசை, ஆகுளி, தழங்கு காளம்
  பொங்கு ஒலி, வரி கண் பீலிப் பேர் ஒலி, வேயின் பொம்மல்7
 4. தொல்காப்பியம் புறத்தித்திணையியல் நூற்பா 1, 2, 3
 5. தொல்காப்பியம், இளம்பூரணர் உரை. சாரதா பதிப்பகம் வெளியீடு 2010, பக்கம் 471
"https://ta.wikipedia.org/w/index.php?title=படையியங்கு_அரவம்&oldid=2961502" இருந்து மீள்விக்கப்பட்டது