படிகத்தின் ஒளியச்சு
இரட்டை ஒளிவிலக்கம் ஏற்படும் படிகங்களில் எத்திசையில் இரட்டை ஒளி விலக்கம் (birefringence) இல்லாதிருக்கிறதோ, அத்திசை படிகத்தின் ஒளி அச்சு (optic axis of a crystal) எனப்படும். அதாவது இத்திசையில் சாதாரண ஒளிக்கதிரும் அசாதாரண ஒளிக்கதிரும் (Ordinary and extraordinary rays) ஒரேதிசையில் செல்லும்.
படிக அமைப்பின் குறிப்பிட்ட தன்மை காரணமாக, ஒளி அச்சில் செல்லும் ஒளி, ஏனைய திசைகளிலும் விட வித்தியாசமாகத் தொழிற்படுகிறது. கால்சைட்டு, குவார்ட்சு போன்ற ஓரச்சுப் படிகங்களில் ஒளியச்சில் செல்லும் ஒளியில் அசாதாரண மாற்றங்கள் ஏற்படுவதில்லை. ஒளியச்சில் செல்லும் ஒளிக்கதிரின் வேகம் ஒளியின் முனைவாக்கத்தில் தங்கியிராது. ஒளிக்கதிர் ஒளியச்சுக்கு சமாந்தரமாகச் செல்லாது விடின், ஒளிக்கதிர் படிகத்தினூடே செல்லும் போது இரு ஒளிக்கதிர்களாக (சாதாரண, அசாதாரண) பிரியும். இவை இரண்டும் ஒன்றுக்கொன்று செங்குத்தாக முனைவாக்கமடைந்திருக்கும்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Hecht, Eugene (1987). Optics (4th ed.). Addison Wesley. p. 337. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8053-8566-5.