உள்ளடக்கத்துக்குச் செல்

பசுமை வேட்டை நடவடிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பசுமை வேட்டை அல்லது க்ரீன் ஹன்ட் நடவடிக்கை
நக்சலைட்டுகள் & மாவோயிஸ்ட் பகுதி
நாள் நவம்பர் 2009 – தற்போது வரை
(15 ஆண்டு-கள்)
இடம் இந்தியாவின் சிகப்பு நடைபாதை பகுதி
தற்போது நடந்து கொண்டிருக்கிறது
பிரிவினர்
இந்தியா இந்திய அரசு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)
பலம்
 • துணை இராணுவப் படைகள் ( மத்திய ரிசர்வ் காவல் படை, எல்லை பாதுகாப்பு படை, இந்தோ-திபத்திய எல்லை பாதுகாப்பு படை, கோப்ரா கமாண்டோ படை): 100,000[1]
 • மற்றவர்கள்: 200,000[2]
 • Greyhounds[1]
 • சிறப்பு நடவடிக்கை படை[3]
மக்கள் சுதந்திர கொரில்லா படை: 8,000 – 9,000 (செப்டம்பர் 2013)[2]
இழப்புகள்
285 இறப்பு (2010)[1]
142 இறப்பு (2011)[1]
94 இறப்பு (2012)[2]
82 இறப்பு (2013 செப்டம்பர் 15 வரை)[2]
172 இறப்பு (2010)[1]
99 இறப்பு (2011)[1]
+145[4]

பசுமை வேட்டை நடவடிக்கை (Operation Green Hunt) அல்லது கிரீன் ஹன்ட் நடவடிக்கை எனப்படுவது இந்திய அரசு மற்றும் துணை இராணுவ படைகள் இணைந்து நக்சலைட்டுகளுக்கு எதிராக நடத்தப்படும் போரை வர்ணிக்க இந்திய ஊடகங்களில் பயன்படுத்தப்படும் பெயர் ஆகும். இந்த நடவடிக்கையானது "சிகப்பு நடைபாதை" (Red Corridor) என்று அழைக்கப்படும் நக்சலைட்டுகள் நிறைந்த ஐந்து மாநிலங்களில் 2009 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது.

இவ்வார்த்தையானது சட்டீஸ்கர் மாநில காவல் அதிகாரிகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு (மாவோயிஸ்ட்) எதிரான ஒரு வெற்றிக்கு பிறகு முதலில் புழக்கத்திற்கு வந்தது. இப்பெயரை நக்சலைட் எதிர்ப்பு நடவடிக்கைகளை குறிக்க பரவலாக ஊடகங்கள் பயன்படுத்தப்படுத்தினாலும் இந்திய அரசு அதன் நக்சலைட் எதிர்ப்பு நடவடிக்கைகளைக் குறிக்க இப்பெயரைப் பயன்படுத்துவதில்லை.
2007 ல் சிகப்பு நடைபாதை பகுதிகள்

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பசுமை_வேட்டை_நடவடிக்கை&oldid=2151921" இலிருந்து மீள்விக்கப்பட்டது