நேர்விளிம்பு
நேர்விளிம்பு (Straightedge) என்பது நேர்கோடுகளை வரையவோ கோடுகளின் நேர்த்தியைச் சரிபார்க்கவோ பயன்படுத்தப்படும் வளைவுகளற்ற நேரான கருவியாகும்.[1] சம நீள ஆயிடைகளில் அடையாளங்குறிக்கப்பட்ட நேர்விளிம்பானது அளவுகோல் என அழைக்கப்படும்.[2] அளவுகோல்களும் நேர்விளிம்பாகப் பயன்படுத்தப்படுவதுண்டு.[3]
ஒளியியல் நேர்விளிம்பான சீரொளிக் கோட்டுமட்டத்தின் மூலமும் கோடுகளின் நேர்த்தி சரிபார்க்கப்படுவதுண்டு.[4]
அமைப்பு
[தொகு]கவராயத்தையும் நேர்விளிம்பையும் பயன்படுத்திச் செய்யும் அமைப்புகளில் நேர்விளிம்பானது பின்வருவனவற்றுக்காகப் பயன்படுத்தப்படுகின்றது.
- இரண்டு புள்ளிகளை இணைத்தல்
- வட்டத்தின் பரிதியில் ஒரு புள்ளியூடாகச் செல்லும் தொடலியை வரைதல்
- இரண்டு வட்டங்களுக்குப் பொதுவான தொடலியொன்றை வரைதல்
கவராயத்தையும் நேர்விளிம்பையும் பயன்படுத்திச் செய்யும் அமைப்புகள் அனைத்தையும் கவராயத்தை மட்டும் பயன்படுத்தியும் செய்ய முடியும். ஆனால், கவராயத்தின் மூலம் புள்ளிகளை மட்டுமே காண முடியும். நேர்கோடுகளைப் பெறுவதற்கு நேர்விளிம்பு இன்றியமையாததாகும். ஆனால், நேர்விளிம்பை மட்டும் பயன்படுத்தி கவராயத்தையும் நேர்விளிம்பையும் பயன்படுத்திச் செய்யும் அமைப்புகள் அனைத்தையும் செய்ய முடியாது.