நெல்லூர் மாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெல்லூர் மாடு, பிரேசில்
பிரேசில் நெல்லூர் மாடும் ஒரு கன்றும் மாதிரிக்காக.

நெல்லூர் மாடு ( Nelore அல்லது Nellore ) என்பது இறைச்சித்தேவைக்காக இந்தியாவில் இருந்து கொண்டுவந்த நாட்டு மாட்டு வகையான ஒங்கோல் மாடுகளில் இருந்து பிரேசிலில் உருவாக்கப்பட்ட ஒரு மாட்டினமாகும். இந்த மாட்டினத்திற்கு இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் நெல்லூரின் பெயரிடப்பட்டது. நெல்லூர் மாடுகளுக்கு தோள்பட்டை மற்றும் கழுத்துக்கு மேலே தனித்துவமான பெரிய திமில் உள்ளது. நீரில் நடக்கவும் மேய்ச்சலுக்கு நடக்க ஏதுவாக இவை நீண்ட கால்கள் கொண்டுள்ளன. நெல்லூர் மாடுகள் மிகவும் குளிர்ந்த வெப்ப நிலையைத் தவிர அனைத்து வெப்ப நிலையையும் தாங்கும் வித‍த்தில் உள்ளன. இவை அதிக வெப்பம் தாங்கும் திறன், நோய் எதிர்ப்பு ஆற்றல் மற்றும் பல்வேறு ஒட்டுண்ணிகளிடமிருந்து காத்துககொள்ளும் ஆற்றல் பெற்றவையாக உள்ளன. இதனால் பிரேசிலில் நெல்லூர் மாடுகள் பெரிய அளவில் வளர்க்கப்படுகின்றன. இந்த மாடுகள் பிற இந்தியவகை மாடுகளைப்போல குறுகிய காதுகள் கொண்டவையாக உள்ளன. தற்போது பிரேசிலில் இறைச்சித் தேவைக்காக வளர்க்கப்படும் மாடுகளில் 80% மாடுகள் (தோராயமான 167,000,000 விலங்குகள்) நெல்லூர் கலப்பு மாடுகளாகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நெல்லூர்_மாடு&oldid=2557500" இலிருந்து மீள்விக்கப்பட்டது