உள்ளடக்கத்துக்குச் செல்

ஒங்கோல் மாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒங்கோல் மாடு (Ongole) என்பது இந்தியாவைச் சேர்ந்த ஒரு நாட்டு மாட்டு இனமாகும். இவை ஆந்திரப்பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில் காணப்படுகின்றன. இதன் பெயர் ஒங்கோல் என்ற ஊரின் பெயரில் இருந்து வந்த‍தாகும், சிலர் இதை நெல்லூர் மாடு என்றும் அழைக்கின்றனர், ஏனென்றால் இந்தப் பகுதி ஒரு காலத்தில் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த‍தாக இருந்த‍தால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. இந்த மாடுகள் கால் மற்றும் வாய் நோய் மற்றும் விசர் மாட்டு நோய் ஆகிய நோய்களில் இருந்து தன்னைக் காத்துக்கொள்ளும் நோய் எதிர்க்கும் திறன் உடையவை. மேலும் எல்லா வகை தட்ப வெப்ப நிலையிலும் வளரக்கூடியவை என்று கூறப்படுவதால் இவற்றிற்கு மக்கள் மத்தியில் பெரும் தேவை உள்ளது. [1] இந்த காளைகளின் வலிமை மற்றும் தீவிரத்தன்மையின் கொண்ட இனங்களில் ஒன்று. இதன் எடை அரை டன் வரை இருக்கும் .1.5 மீட்டர் உயரம் ,1.6 மீட்டர் நீளமும் கொண்டவை . இதனால் இவை மெக்சிக்கோ மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் காளைச் சண்டைக்குப் பயன்படுத்தப்படுகின்றன. இந்தக் காளை தமிழகம், ஆந்திராவில் பாரம்பரிய சல்லிக்கட்டு விளையாட்டில் பயன்படுத்தப்படுகிறது. இந்த மாடுகளைச் சல்லிக்கட்டு போன்றவற்றிற்காக வளர்ப்பவர்கள் இவற்றின் இனப்பெருக்கத்தின்போது இனத்தூய்மையைப் பாதுகாத்து வளர்த்து வருகின்றனர்.

ஓங்கோல் பசுக்கள் 432 இல் இருந்து 455 கிலோ வரை எடை கொண்டவை. இவை 279 நாட்கள் வரை பால் தரக்கூடியன. இதில் 5% வரை கொழுப்பு தன்மை உள்ளது. இதனால் இதன் கன்றுக்குட்டிகள் செழிப்பாக வளர்கிறன்றன. ஓங்கோல் பசுக்கள் அதன் கன்றுகளிடம் மிக நெருக்கமாக இருக்கும் . மற்ற விலங்குகளிடம் இருந்து கன்றுகளை பாதுகாப்பதில் வல்லது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. [1] Andhra’s Ongole bulls are prized as they are said to be resistant to mad cow disease - source Outlook India.
  2. மாடு வளர்த்தல் , கே . சங்கரன் , அசோகன் பதிப்பகம் ,2004
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒங்கோல்_மாடு&oldid=3073498" இலிருந்து மீள்விக்கப்பட்டது