நுண்ணுயிர் வளையம்
Appearance
நுண்ணுயிர் வளையம் (Microbial Loop) நுண்ணுயிர்களால்/நுண்ணுயிர்களுக்குள் அறியப்படும் ஒரு உணவு சுழற்சிமுறை. இக்கலைச்சொல்லை உருவாக்கியவர் ஃபரூக் அசாம் என்னும் கடல் நுண்ணுயிர் ஆய்வாளராவார். இது பெரும்பாலும் நீர்நிலைகளில் காணப்படும் உணவு சுழற்சி முறையையே குறிக்கப்பயன்படுகிறது.
நுண்ணுயிர் வளையம் என்பது கரைந்த கரிமப்பொருட்கள் மற்றும் ஆற்றல், நுண்ணுயிர்களான பாக்டீரியா தொட்டு மூத்தவிலங்கு, அலைவிலங்கு மற்றும் அதன் மேலுயிர்கள் தொட்டு பேருயிர்களை யடையும் நிகழ்வே ஆகும்.