நாணய சோதனை
Appearance
நாணய சோதனை (Coin test)(அல்லது மணி உலோக அதிர்வு ) என்பது ஒரு துளையிடப்பட்ட நுரையீரலைப் பரிசோதிக்கப் பயன்படுத்தப்படும் மருத்துவ நோயறிதல் சோதனை ஆகும். துளையிடப்பட்ட நுரையீரலிருந்து நுரையீரல் உறைக்குழிக்குள் காற்று அல்லது திரவம் கசியலாம், எடுத்துக்காட்டாக, நுரையீரல் சவ்விடை வளிமத்தேக்கம் அல்லது நீர்க் கோர்த்த மார்பு.
நாணயச் சோதனையில், மார்புக்கு எதிராக வைக்கப்படும் ஒரு நாணயம், கசிவு எனச் சந்தேகப்படும் இடத்தில் மற்றொரு நாணயத்தால் தட்டப்படுகிறது. மூச்சு ஒலிகள் மற்றும் நாணயங்களின் ஒலியைக் கேட்கப் பின்புறத்தில் ஒரு இதயத்துடிப்பு மானி வைக்கப்பட்டுள்ளது. ஒரு விண்ணெனல் சத்தம் கேட்டால், காற்று அல்லது திரவம் நுரையீரல் உறைக்குழுக்குள் நுழைந்திருக்கலாம் என அனுமானிக்கப்படுகிறது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Aggarwal Praveen; George K. Mathew (2015). Medicine: Prep Manual for Undergraduates. Elsevier India. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 813124234X.
- Drugs.com இல் ஸ்டெட்மேனின் மருத்துவ அகராதியில் பெல்மெட்டல் அதிர்வு