நமசிவாய மாலை
Appearance
நமசிவாய மாலை [1] என்னும் நூல் பாட்டியல் கூறும் சிற்றிலக்கிய வகையில் வருக்கமாலை வகையினைச் சேர்ந்தது. 16 ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூல். நூல் அச்சாகவில்லை. ஏட்டுப்படிவத்தில் உள்ளது. இதில் காப்புச் செய்யுளும் 100 கண்ணிகளும் உள்ளன. [கௌ], [சௌ], [தௌ] எழுத்துக்களுக்கும், [ய], [வ] வரிசையில் உள்ள எழுத்துக்களுக்கும் பாடல்கள் இல்லை.
ஒவ்வொரு பாடலும் 'நமசிவாய' என்னும் சொல்லுடன் முடிகிறது. "நமசிவாய என்பது இங்கு மந்திரமாக அல்லாமல் பெயராகவே வைக்கப்பட்டு விளியாக உள்ளது". [2]
சத்தியும் சிவமும் ஆகித் தாணுமாய்ச் சகத்துக்கு எல்லாம்
முத்தியை அளிப்பாய் ஆகி முதல்வனே நமசிவாய
பிறை பணி நடையினாலை பிஞ்ஞகா அடியார்க்கு எல்லாம்
குறைவு அற வாழ்வு அளிக்கும் கொற்றவா நமணிவாய
அடிக்குறிப்பு
[தொகு]- ↑ மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 126.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ மு. அருணாசலம் குறிப்பு
- ↑ அறுசீர்க் கண்ணிகள்